Thursday, May 24, 2012

சித்தம் 4


இதுவரை:

அன்று
 தென்னாவரம் ஆண்ட பாண்டியனிடம் போரிட்டு, நாகமணி ஒலியால்
தோல்வியுண்ட ஆர்ய படைகள் சக்தி இழந்து, சிதைந்து போயிருந்தது. தன்னுடைய வெற்றியினை விட ஆரியரின் நிலை கண்டு கலங்கியே இருந்தான் பாண்டியன். என்ன தான் அவன் நாகமணி கற்களை பொடிகளாக்கி எதிர்கால அழிவுகளை தவிர்திருந்தாலும் அவனால், தன்னால் ஏற்பட்ட அழிவை அவன் தான் கொண்ட கர்மவினை என்றே கருதினான்.


இன்று
ஜெயந்தியும் நந்தனும் இரவை நெருங்கும் மாலையை ரசித்து கொண்டு தங்களின் வண்டிகளை நோக்கி நடந்தனர். டீ கடை அருகே வந்து கொண்டிருந்த அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி......... driver சுப்பு சற்பமென ஊர்ந்து கோவிலின் மலை பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தான்......


இனி

இன்று
தான் கொண்ட குழப்பங்கள் தன்னை தொடருவதை உணர்ந்த நந்தன், சற்றும் தாமதிக்காமல் சுப்புவை பின் தொடர்ந்தான். வேறு வழியேதும் இல்லாமல் ஜெயந்தி தன் மாமா சுந்தரத்திற்கு call செய்து கொண்டே நந்தனை பின் தொடர்ந்தாள். சுப்புவின் வேகம் நந்தனையும் ஜெயந்தியையும் மூச்சிரைக்க வைத்தது. 

ஜெயந்தி, இது ஏதோ multiple personality மாதிரி தெரியுது, ரொம்ப நாளா இந்த சற்ப தேடல், என்னோட சேர்த்து அவனுக்கும் தொத்திகிட்டது. அனேகமா அது தான் இதுக்கு காரணம்னு நெனைக்குறேன்.”

சுந்தரம் ஜெயந்தியின் அலை பேசியின் மறு முனையிலிருந்து,
“ஜெயந்தி இன்னும் ½ மணி நேரத்துல அங்க நா இருப்பேன், இந்த நாளுக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன். பயப்படாம அங்க நடக்குறத எப்படியாவது video பண்ணிவை. தைரியமா இரு, இந்த நாள், இந்த நிமிஷம் சாதாரணமானது இல்ல, புரிஞ்சது தானே நா சொல்லுறது...... 

“ம்‌ம்‌ம்‌ம்..... புரியுது மாமா.......”  phonecut செய்து விட்டு, கண்களை மூடி பின் விழி திறந்து பார்த்தாள் சுற்றிலும் இருட்டு, அங்கு நடந்ததை பார்த்து அதிர்ந்தே போனாள் ஜெயந்தி.

சுப்புவை நெருங்கிய நந்தனை சற்பமென மாறிய சுப்பு கடிக்க முயன்ற போது  அருகில் இருந்த வாழமட்டையை வைத்து வழி மறித்தான். ஆச்சர்யம்! அம்மட்டையானது நீலமென மாறியதும் மிரண்டே போயினர் ஜெயந்தியும், நந்தனும்.   


அன்று
பாண்டியன் தான் கொண்ட கர்ம வினை நீங்க தன் குருவும், அஷ்டமா சித்திகளை பெற்றவருமான அகத்தியரை நாடினான். 

அகத்தியர்
  நாகமணி கற்களின் ஒலிகள் ஆரியரின் உடலில் ஊடுருவி செல்களையெல்லாம் செயல் இழக்க வைத்திருந்தது. அவற்றை சரி செய்தால் மட்டுமே பாண்டியனுடைய மனக்குறையும், கர்ம வினையும் நீங்குமென தெரிவித்தார் அகத்தியர். 

அவற்றை சரி செய்ய அஷ்டலோக செம்பொன் (Mono atomic Gold) எனப்படும் 8 உலோகங்களினால் ஆன ஒரு தாது பொருள் தேவை படும் என்றும், அது Persia வளை கூடாவின் (Hawai தீவு – அன்றைய மாயன் நாகரீக ஸ்தலம்) கடல் நீரில் மட்டும் கிடைப்பதாகும்.

இந்த Mono atomic Gold மூளை பகுதியில் அதிக மின் ஆற்றலை ஏற்படுத்தி செயலிழந்த செல்களை புதுப்பிக்கும் தன்மையுடையது. அப்படிபட்ட தாதுவை அகத்தியர் எடுத்து தருவதாக பாண்டியனிடம் உறுதி செய்தார்.         

இன்று  
அங்கு விரைந்து வந்த சுந்தரம், ஜெயந்தியையும், நந்தனையும் தேட முற்பட்ட போது, நீண்ட நாள் தான் தேடும் ஒன்று கிட்டப்போவதை போல் உள்ளுணர்ந்தான். அவ்விருவரும் சுந்தரத்தின் கண்ணில் பட,
“என்ன ஜெயந்தி கிடைச்சதா.......”

இல்லை என்பன போல் தலையாட்டிய ஜெயந்தியை வினோதமாக பார்த்த நந்தனின் கவனத்தை திசை திருப்ப சுந்தரம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
I am சுந்தரம், நான் ஒரு pseudoscience philosopher”.

நந்தன், “அது என்ன Pseudoscience….?”

சுந்தரம், “உங்க பேர் என்ன.....”

“நந்தன்”.

 “Mr.நந்தன், Pseudoscienceனா அறிவியல் சார்ந்த சாத்தியம் உள்ள விஷயம் ஆனா அதுக்கு அறிவியல் சார்ந்த ஆதாரம் இல்லாம இருக்கும். எனக்கு இந்த வள்ளிபுறத்தின் மீது இருக்குற தீவிரத்திற்கு ஒரு வகையில் இந்த pseudoscienceசும் ஒரு காரணம்”.

நந்தன்,..........

ஏற்கனவே குழம்பி போயிருந்த நந்தனை, மீண்டும் ஒரு குழப்பம் தாக்கியது போல் உணரச்செய்தது சுந்தரத்தின் விளக்கம்.

“என்ன புரியலையா நந்தன்.....”

“Sir, அதெல்லாம் இருக்கட்டும்.....  இப்போ என்னோட Driver சுப்பு என்ன ஆனான்னு கண்டு பிடிக்கணும்.”

" உங்க சுப்பு எங்க போய்கிட்டு இருக்கான்னு என்னோட Pseudoscience theory மூலமா சொல்ல முடியும். ஆனா உங்களால அத புரிஞ்சிக்க சில தெளிவுகளும், எதையும் கற்க திறந்த மனமும் வேண்டும்".

இதையாவும் ஆமோதிப்பது போல் தலையசைத்தாள் ஜெயந்தி....   

“நந்தன் உங்களுக்கு விளங்க சொல்லனும்னா, நாம உலக நாகரீகத்தின் ஆதியை தேடிய பயணமொன்று செல்லனும். அந்த பயணமானது,dooms day”னு சொல்லப்படுற மாயன் நாகரீகத்தின் முடிவிலிருந்து பின்னோக்கி நாம செல்லனும். 5,000 ஆண்டுகளுக்கு முன்னாடி மாயன் சமுதாயம், 2012ல உலகம் அழியும் என்றும், அப்ப அவங்களோட நம்பிக்கை தெய்வமான – அனுனாகி என்ற கடவுள் தோன்றி மீண்டும் அவர்களோட சமுதாயத்த படைப்பார் என்பதும் அவர்களோட நம்பிக்கை”.  

அனுனாகி

 “சுந்தரம் Sir, நீங்க சொல்ற நம்பிக்கைக்கும் – சுப்பு எங்க போய் இருபான்றதுக்கும் என்ன தான் சம்பந்தம்”.

“சம்பந்தம் நிறையா இருக்கு Mr.நந்தன்.....” சுப்புவோட அப்பா – உசிலம்பட்டி விருமாண்டி அவரோட gene தான் உலகின் முதல் மனித மரபணுவான M130 மரபணுவாகும். அந்த முதல் மரபணு ஆப்ரிக்க தேசத்திலிருந்து Persia வாயிலாக தென் தமிழகம் வந்து இருக்கு. ஒரு வகையில சொல்லனும்னா சுப்பு முதன் மனிதனோட வித்து அப்படிங்கறத விட மாயன் சமுதாயத்தோட கடைசி நம்பிக்கை..

“இவ்ளோ நாள் இவன் கூட இருந்து இருக்கேன் எனக்கே தெரியாத இந்த விஷயம் உங்களுக்கு எப்டி தெரியும் சுந்தரம்....”

“இருட்டிருச்சு நந்தன், நாம வீட்ல போய் மிச்சத்த பேசிக்குவோம்.....”

"Sir, அப்ப சுப்பு....."?    


அன்று

அகத்தியர் தான் கற்றறிந்த சித்திகளினால் மாயன் சமுதாயம் குடியுண்ட இடத்திற்கு பிரயாணம் ஆனார். அங்கு நாகரீகம் தலைக்காத அந்த காலகட்டத்தில், வாழ்வின் ஆழம் கண்ட அகத்தியர் அவர்களுக்கு தொழில் நுட்பம், கட்டிட கலை, வானவியல் சாஸ்த்திரம், போன்றவற்றை கற்றுக்கொடுத்தார். அவர்களின் இஷ்ட தெய்வமாக மாறிய அகத்தியரை, அனுனாகி என்று பெயரிட்டு வணங்கினர். 

 மாயன் இனத்தவரைக் கொண்டே அவர் தேடி வந்த அஷ்டலோக செம்பொன் (Mono Atomic Gold) எனும் தாதினை எடுத்து பாண்டியனின் குறை நீக்கினார்.
மாயன் பூமியில் தனக்குதவிய மக்களுக்கு அகத்தியர், எதிர் காலத்தை கணிக்கும் நாட்காட்டியை (மாயன் Calender) தன்னுடைய உயிர் சக்தி (Cosmic Energy) மூலம் உயிரூட்டி பரிசளித்தார். என்று அது உயிரற்று நிற்கிறதோ அன்று அதற்கு உயிர் சக்தியூட்ட மீண்டும் தான் வருவதாக வாக்களித்து விடை பெற்றார் அகத்தியர். 

அவர் (அனுனாகி) விடை பெற்று சென்ற சிறிது கால கட்டங்களிலே, நெபுலா கிரக வாசிகள் - மாயன் சமுதாயத்தினர் ஒவ்வொருவரிடமும் இருந்த  உயிர் சக்தியை (Cosmic Energy – அகத்தியர் அருளியது) அபகரிக்க அவர்கள் அனைவரையும் தங்களின் கிரகத்துக்கு கவர்ந்து சென்று விட்டனர்.  

“சித்தனின் வாக்கென்றும் பொய்க்காது,
பொய்க்கும் வாக்கென்றும் சித்தனின் நாவினில் பிறவாது..”Friday, April 6, 2012

சித்தம்.... 3

இதுவரை : 

வரதன் குணா இருவரும் மனப்புரிதளுக்காக மதுரையில் இருந்து FZ பைக்கில் புறப்படுகின்றனர், petrol வள்ளிபுரத்தில் தீர்ந்து விடுகிறது. இருவரும் கால் நடையாக நாக பூசணி அம்மன் கோவிலுக்கு செல்ல முற்படும் போது, வரதனின் சித்ததின் படி நாகமாக ஊர்ந்து சென்று நாகபூசணியின் அருள் பெறுவதை பார்க்கும் குணா மயங்கிவிடுகிறாள். மறுநாள் வரதனிடமிருந்து call வருகிறது, விபரம் அறியும் முன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. தற்செயலாக வரதனின் “சு தா”வை (டைரி) திருப்பி பார்க்க நேரிடுகிறது. அதில் குறிப்பிட்ட விஷயத்தை கண்டு உண்மை விளங்கியவளாக தனது வண்டியை எடுத்துக் கொண்டு வள்ளிபுரம் விரைகிறாள் குணா. 

இதற்கு மேல் தனது கற்பனை சக்தி கறைந்து போனதை தன்னுள் எண்ணியவாறு இக்கதையை எழுதிய நந்தன், மேற்கொண்டு கதையை தொடரும் பொருட்டு வள்ளிபுரம் பயணித்து கொண்டிருந்தான்.

Sir இந்த வரதன் அப்டி எங்கதான் போனான், உண்மையாவே நாகமாக மாறிடான, driver சுப்பு கேட்ட கேள்வி கதையை எழுதிய நந்தனின் சிந்தனை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டார் போல் இருந்தது.

நந்தன், நிஜங்களின் நிழலை பதிவு செய்வதில் காதல் கொண்டவன். அவன் கொண்ட காதல் கடந்த 2 வருடங்களாக நாக பூசணியின் மீது படர்ந்ததற்கு  காரணம், தன்னுடைய P.hd படிப்பிற்கான Thesis work இந்திய கோவில்களும் அமானுஷ்ய சூழல்களும் என்பதாகும். கடமையென ஆரம்பித்த நந்தனின் தேடல், ஆதியின் ஆழம் காண ஆசை கொண்டது.

  20,000 வருடங்களுக்கு முன்பு சிலோனில் இருந்து வள்ளிபுரத்திற்கு இடம் பெயர்ந்த நாக மாணிக்க கற்கள், உக்கிர பாண்டியனின் சஞ்சலத்தை போக்கியது.


 வள்ளிபுரம் நாகபூசணி கோவிலில் உக்கிர பாண்டியன் வடித்த கல்வெட்டில், ஸ்ரீ-ஹர வருட முடிவில் நாக மாணிக்க கற்கள் மீண்டும் இடம் பெயர்ந்து எலும்புருக்கி (TB) நோயினை முறிவு செய்து மக்களின் துயர் துடைக்கும் என்பதே அம்மனின் சித்தம் என்றிருந்தது.

ஸ்ரீ-ஹர ஆண்டின் முடிவு என்பது 2012 தமிழ் வருட முடிவு, அதாவது ஸ்ரீ-நந்தன ஆண்டின் துவக்கம் (வருகிற April 13 முதல்). நாக மாணிக்க கற்கள் இடம் பெயர இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில், அவற்றை காண தனக்கு சித்தம் உண்டா இல்லையா என்கிற சிந்தனை எனும் சிலந்திவலை சிக்கலில் தனது மனம் ஆழ்ந்து இருந்த போது தான்........  

இதுக்குமேலயும் யோசிக்க முடியல சுப்பு, அதனால தான் நாம இப்போ வள்ளிபுரம் போறோம் அங்க போனாலாவது ஏதாவது தோனுதானு பார்போம், நந்தனின் வார்த்தைகளில் தோல்வியை ஒப்புக்கொண்ட தோரணை தெரிந்தது.

பீப் பீப் பீப் பீப் பீப்................... (horn ஒலிக்கிறது)
யாருடா இவன் நொச்சு நொச்சுனு என்று tension ஆன சுப்பு, பின்னே வந்த பைக்கிர்கு side விட்டான். அந்த பைக் முன்னேறி செல்ல செல்ல நந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது....... ஆம் அந்த பைக் TN 60J 6058, அதுவும் FZ அதனை ஓட்டி செல்வதோ ஒரு பெண்...............


இனி

தான் உருவாக்கிய கதைமாந்தள் உயிர் பெற்று ஊடுருவதை பார்த்து பிரமிப்பில் இருந்த நந்தனுக்கு இரண்டாவது ஆச்சர்யம் காத்து இருந்தது. Over take செய்த அந்த பெண் slow செய்து, இரு வண்டிகளும் சமநிலை வந்ததும் நந்தனிடம் அப்பெண்,Excuse me….. வள்ளிபுரம் இன்னும் எவ்வளவு தூரம்” என்றாள். நந்தன் சில கணங்களுக்கு பேச்சற்றவனாக இருந்தான். அவளின் கண்கள் கத்தியினும் கூர்மையாய் இருந்தது. ஏனோ தனக்கான விடை இவளிடம் இருக்கும் என்பதில் அசாத்திய நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது நந்தனுக்கு.

“நாங்களும் அங்க தான் போறோம், இதே வேகத்தில போனா இன்னும் கால் மணி நேரத்தில போயிடலாம்” என்றான் நந்தன். “Thanks..” என்று கூறியவள், கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போனாள் பெயர் தெரியாத குணா. எதையும் விளக்கம் தந்து புரியவைக்கும் நந்தனுக்கு, நடப்பவை யாவும் விளக்கம்  இல்லாமல் அடுத்தடுத்து நடந்தேறுவதை “இதுதான் தன் சித்தமோ....” என்றெண்ணிக் கொண்டான்.

நடப்பவைகளை குறிப்பால் உணர்ந்த driver சுப்பு, வினா ஏதும் வினவாமல், நிழல் குணாவான நிஜப்பெண்ணை பின் தொடர்ந்தான். மேலும் ஒரு ஆச்சர்யமாய், சிறிது தூரத்திலேயே அவள் வண்டியை ஒரு டீ கடையில் விட்டு விட்டு கையில் ஒரு புத்தகத்துடன் வள்ளிபுரம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“ஒவ்வொரு சூழலும் ஒவ்வொரு சந்தர்ப்பம் என்னும் கருத்தில் உறுதி கொண்ட நந்தன் சுப்புவிடம், “வண்டியுடன் இந்த டீ கடைலேயே இரு, தயவு செஞ்சு இங்க இருந்து போகுற வர தம் அடிக்காத please… “ அங்கிருந்து நந்தன் சென்றதும் காலை அனைத்து வைத்திருந்த சிகரெட் துண்டை பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்து..... Taste differs for different tongue….” என்று தனக்குள் புலம்பிக் கொண்டான்.

 நிழல் குணாவை தனக்கான விடை தேடி விரட்டிச் சென்றான் நந்தன். எவ்வளவு பெரிய தைரியசாளியும், பழக்கமில்லாத பெண்ணிடம் முதல் முறை பேசுவதற்கு வார்த்தை இல்லாமல் தடுமாறுவான். அதே சூழல் இப்போது நந்தனுக்கும் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் தான் கொண்ட தயக்கம் தன்னிடம் உள்ள வினாவை விடை காணவிடாமல் கொன்று விடும் என்று எண்ணியதன் பலனாய் அவளை,Excuse me….. Are u குணா?” என்றான்.

சம்பந்தம் இல்லாத கேள்வி ஒன்று திடீரென்று தன்னை நோக்கி வந்ததை எதிர் பார்க்காத அந்த பெண், “இல்ல, என் பெயர் குணா கிடையாது. ஏன் கேக்குறீங்க” என்றாள்.

நிழல் குணாவின் பெயர் நிஜத்தில் குணா இல்லை என்பதில் சிறிய ஏமாற்றம் நந்தனுக்கு. தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டு, தான் ஏன் அவளை குணா என்றழைத்தான் என்கிற கதையை கோவிலை நோக்கி நடந்தவாறே கூறிக்கொண்டு வந்தான். கோவில் வருவதற்க்கும் நந்தன் கதை கூறி முடிப்பதற்க்கும் சரியாக இருந்தது.

கதையை கேட்டு விட்டு, இரண்டு நிமிடம் கண் மூடிய மௌனத்தை - நீண்ட பெருமூச்சுடன் முடித்துக் கொண்டாள் அப்பெண். So Mr.நந்தன், உங்களுக்கு இப்போ உங்க கதைக்கு ஒரு முடிவு தேடி இங்க வந்து இருக்கீங்க. அதுக்கு நான் யாரு, எதுக்காக இங்க வந்து இருக்கேன்னு உங்ககிட்ட சொல்லனும் right.          

அவளின் பதில்களை வரவேற்கும் தோரணையில் தலையசைத்து yes, you are right என்றான்.

என் பெயர் ஜெயந்தி, நா இலங்கையில இருந்து வந்துருக்கேன். நந்தன் உங்களுக்கு வேண்டிய பதில் கடிப்பா என்னால தர முடியும். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில விளக்கங்கள் நீங்க எனக்கு தரனும், இத நீங்க வினா எதிர் வினாதல்னு நினைக்க வேண்டாம், நம்மளோட தேடல்ல ஒரு தெளிவு வேணும் அதுக்காக தான் கேட்குறேன்.

அவளின் உருவ அமைப்பு அவளுக்கு 21 அல்லது 22 வயது இருப்பதை போல் இருந்தாளும்,அவளுடைய பேச்சில் காணும் மெச்சூரிட்டி 40, 45 வயதை ஒத்து இருந்தது. அவளோட பேச்சு தந்த வியப்பில் அவள் கூறியதற்கு ஆம் என்பதை தெரிவிக்க, மீண்டும் ஒரு முறை தலையசைத்தான் நந்தன்.    

சொல்லுங்க நந்தன்  “இவ்வளவு ஆர்வமா நாக பூசனியின் வரலாறை தெரிஞ்சிப்பதின் காரணம் என்ன?”

கடமையா ஆரம்பித்த வேலை இது.... என்னை நானே தவிர்க்க முடியாத 
ஆர்வத்தின் விளைவே என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்ததே தவிர பெருசா வேற காரணம் ஒண்ணும் இல்ல.

தப்பா நெனைச்சுக்காதிங்க நந்தன், வெறும் அற்ப பெயருக்கும், புகழுக்கும், அழியும் பொருளுக்காகவும், நம் முன்னோர்கள், சித்தர் பெருமக்கள் கண்டறிந்த பெரும் உண்மைகளையும், பொக்கிசங்களையும் பற்றிய செய்திகள வெளிக்கொண்டு வருவதுல எனக்கு உடன் பாடில்ல அதனால் தான் அப்டி கேட்டேன்.

ஜெயந்தி கூறிய பதில் நந்தனை இவ்விசயத்தில் மேலும் ஆழம் காண தூண்டியது. “நீங்க சொல்ற விஷயம் எனக்கு மேலோட்டமா புரிஞ்சுக்க முடியுது, ஆனா அதனோட ஆழ் கருத்துக்கள என்னால புரிஞ்சுக்க முடியல கொஞ்சம் விளக்க முடியுமா”.

30 வினாடி கண்களை மூடிய தியான நிலைக்கு சென்றவள், குருவே சரணம் என்று தனது மானசீக குருவை வணங்கி விட்டு விழிகளை திறந்தாள். 

உங்களோட thesisல  உள்ளடங்கிருக்கிற அமானுஷ்யம் என்கிற விஷயம் இன்னைக்கு சூழல்ல வெறும் sensation ஏற்படுத்துவதற்கான விஷயமா மட்டும் தான் பயன் படுத்தப்படுது. அதுக்கு பின்னாடி இருக்குற உள் அர்த்தங்கள நாம அறிய ஆர்வம் காட்டுறது கெடயாது.

நம் முன்னோர்கள்ல இறை அம்சம் பெற்றவங்களையும், சித்தர்களையும், நாம super heroவை போல எண்ணுறோம். ஆனா உண்மை அதுயில்ல, அவங்களும் நம்மள மாதிரி சாதாரண வாழ்வுதான் வாழ்ந்து வந்தாங்க. அவங்களோட சிந்தனைகளயும், அறிவியல் சித்தாந்தங்களயும், அறிய கண்டு பிடிப்புகளயும் சமத்துவம் இல்லாத அரசாட்சி காலத்துல புறக்கணிக்கப்பட்டது. Legalலா இந்த மாதிரி பிரச்சனைய சந்திச்சவங்க, illegalலா வேற மாதிரி பிரச்சனைகள சந்திச்சாங்க. தவறான காரியங்களுக்கு தங்களுடைய கண்டுபிடிப்புகள் சென்று விட கூடாதுங்கரதுக்காக மறை பொருளா அந்த கண்டு பிடிப்பையெல்லாம் குறிபேடுகல்ல சொல்லி இருப்பாங்க.

அந்த மாதிரி மறை முகமா சொல்ல பட்ட விஷயத்துல ஒன்னு தான் இந்த நாக மாணிக்க கல்லும், அதை பற்றிய தவலும். 

எல்லாத்தையும் எல்லாராலையும் தெரிஞ்சுக்க முடியாது, நீங்க அப்படி தெரிஞ்சிக்க நினைச்சதுல தப்பு ஏதும் இல்ல, ஆனா எதெல்லாம் நமக்கு தெரிஞ்சுக்கனுமோ அது மட்டும் தான் நமக்கு வெளிபடையா தெரிய வரும், அதையும் மீறி ஒரு சில விஷயங்களை நமக்கு தெரியுதுனா அது தான் நம்மோட சித்தம்.

நாகபூசணிக்கு அப்போது தீபாராதனை காட்டப்பட்டது, அதில் தன்னை ஆட்கொண்ட குழப்பங்கள் மெல்ல மறைந்து கொண்டு இருப்பதை உணர்ந்தான் நந்தன். இருப்பினும் இந்த குணா (எ) ஜெயந்தி இலங்கையில் இருந்து இங்கு வர காரணம் என்ன, அவளின் சித்தம் தான் என்ன? என்ற கேள்விகள் அவனுள் எழாமல் இல்லை, அவளிடமே அதையும் கேட்டேன்.             

இலங்கைல இருக்கிற சகலகலை சாலைல தான் நா படிச்சுக்கிட்டு இருக்கேன். என்னோட பொழுதுபோக்கே சித்தர் பாடல்களையும், அந்த கால கல்வெட்டுகளையும் எல்லாத்துக்கும் புரியிற மாதிரி எளிமையா இந்த www.siththarkal.com websiteல பதிவு பண்ணுறதுதான்.

அந்த காலத்துல இருந்த மருத்துவ முறையில குணப்படுத்தின பல நோய்கள இன்னைக்கு நம்மால தவிர்க்கவும் முடியல, தடுக்கவும் முடியல. 

அப்படி பட்ட நோய்கள ஒன்னு தான் TB, இப்பவும் மும்பையில 100 கணக்கான பேர் மகிமா hospitaltreatment பலன் தராததுனால இறந்து போய்கிட்டு இருக்காங்க. இத முறியடிக்க நம் முன்னர்களோட படைப்புகள் ஒன்னு தான் நம்ம கிட்ட இருக்கிற ஒரே ஆயுதம். 

மதுரைல இருக்கிற எங்க சுந்தர மாமா மூலமா இங்க இருக்குற நாகபூசனி கோவில பத்தியும், நாக மாணிக்க கள்ள பத்தியும்   கேள்வி பட்டு இங்க வந்தேன்.

ஏதோ ஒன்று ஓரமாய் நெளிந்து செல்வதை உணர்ந்த இருவரும் திரும்பி பார்த்தனர்...... அது ஒரு சற்பம்....... மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த அதனை எந்த தொந்தரவும் செய்யாமல், மனதினுள் நாக பூசணியை ஒரு கனம் இருவரும் வணங்கி கொண்டனர். பின்னர் ஜெயந்தியே  விளக்கங்களை தொடர ஆரம்பித்தாள்.

உங்க கதையில நீங்க சொன்ன மாதிரி நந்தன வருடத்தின் ஆரம்பத்துல நாக மாணிக்க கற்கள் இடம் மாறுவது உறுதி, அத இடம் பெயர அம்மன் ஆணை இட்டு இருப்பது நாக வம்ஸத்து வாரிசிடம் தான். இதெல்லாம் எங்க மாமா சொன்ன தகவல்கள் தான்.

திசை திருப்பி விடப்படும் ஏவுகணை போல் நந்தனின் எண்ணம் எல்லாம் இப்போது ஜெயந்தியின் மாமாவை சந்திப்பதில் இருந்தது, அதையும் அவளிடமே தெரிவித்தான்.

நந்தன் ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பா ஒவ்வொரு வரலாறு உண்டு, அத தேடி கண்டு பிடிச்சா..... சொல்ல முடியாது, ஏன் நீங்க தேடுர அந்த வரதன் அதாவது நாகா வம்ஸத்து வாரிசு, அது நீங்களா கூட இருக்கலாம். Anyway, கண்டிப்பா எங்க மாமா கிட்ட உங்கள கூட்டிக்கிட்டு போறேன்.

ரொம்ப நன்றி ஜெயந்தி... உங்கள சந்திச்சதுல நா ரொம்ப தெளிவா ஆனா மாதிரி feel பன்றேன். உங்களோட www.siththarkal.com கு இனிமே ஒரு கொ.ப.செ. கெடைசாச்சுனு வச்சுக்கோங்க.    

இருவரும் நாக பூசணியை வணங்கி கொண்டிருந்தனர்.
 நந்தனுக்கு மட்டும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத நெருடல், உள்ளுணர்வு. இன்று ஏப்ரல் 13, ஹர வருடத்தின் இறுதி நாள், மாணிக்க கற்கள் இடம் பெயர வேண்டிய நேரம், இறைவா இதில் என் பங்கு தான் என்ன? ஜெயந்தியின் நட்பு கிடைக்க காரணம் தான் என்ன... இது தான் என் சித்தமா..? சுந்தர மாமா என்பவர் நாகா வம்ஸத்து வாரிசா.....? தெளிந்த நீரோடை போல் மாறிய நந்தனின் மனது மீண்டும் கல்லெறிந்தார் போல் மாறியது.

இருவரும் இரவை நெருங்கும் மாலையை ரசித்து கொண்டு தங்களின் வண்டிகளை நோக்கி நடந்தனர். டீ கடை அருகே வந்து கொண்டிருந்த அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி......... driver சுப்பு சற்பமென ஊர்ந்து கோவிலின் மலை பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தான்......
  
 

“சித்தனை தவிர 
   யார் அறிவார்,                                               அவர்தம் கொண்ட சித்தத்தினை......”
      
பாகம் 4 ஐ படிக்க click செய்யவும்
to download this story in pdf.. click the link below..
http://www.box.com/s/517b771967ad13657e25
Thursday, March 15, 2012

தொடரும் சித்தம்........ குணாவின் கைகளில் mobile அடித்துக்கொண்டு இருந்தது, மனதில் வரதனை பற்றிய கேள்விகள் பல ஓடிக்கொண்டு இருக்கையில் அவனிடமிருந்தே call வருவதால் அவளுடைய கற்பனை குதிரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவள் மனதில் வரதன் சற்பமாக இருப்பானோ, அல்ல சாதாரணமாக இருந்து call செய்வானோ என்று பயந்தாள். ஒரு வேல, அவங்க அப்பா call பண்றாரோ, இல்ல போலீஸ் stationல இருந்து call வருதோ, இப்படி பல குழப்பத்துடன் phoneattend செய்தாள் குணா.  

குணா இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு? Sorry, I am really very very sorry. நேத்து அப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல. நிறைய விஷயம் என்னை மீறி நடந்துருச்சு . I am totally out of control yesterday. எனக்கு தெரியும் நேத்து நடந்த எந்த விஷயமும் சாதாரணமானது அல்ல, ஆனா என்னால எல்லாத்துக்கும் விளக்கம் தரா முடியாது. Hello……. குணா....... Hello குணா are you there…..?
..............
.............................            

நிசப்தம் அடங்கிய சில வினாடிக்குப்பின்,

இழந்த நிதானத்தை திரும்ப பெற்ற குணா, தைரியத்தை திரும்பப்பெற்றவளாக, Yes I am here, but I don’t know how I am here. தைரியம் அவளின் வார்த்தையில் இருந்தாலும், பதட்டமும், பயமும் அவளின் குரலில் வெளிப்பட்டது. வரதன் நீ எங்க இருக்க, எப்படி இருக்க..... நா எப்டி.....

குணா hold on hold on……  இப்போ நா சொல்லுரதமட்டும் கேளு, நான் எங்க இருக்கேனு எனக்கே தெரியல, இங்க ஒரு ஆறு ஓடுது, இது ஒரு மலைகாடு – அதுவும் மேற்கு தொடர்ச்சி மலை மாதிரி தெரியுது. நா எப்படி இங்க வந்தேனு எனக்கே தெரியல. Please எனக்கு உன்ன விட்ட வேற யாரும் help பண்ண முடியாது...... please help....... ...... call கட்டானது.

அங்க அப்டி என்ன தான் நடக்குது, திரும்பியும் அவனுக்கு ஏதாவது ஆச்சா, மீண்டும் வரதனின் mobile no. அழுத்தினாள் குணா, the number you have dialed is switched off, please try later or call sometime. இப்ப நா என்ன பண்ணுவேன், எங்கனு போயி வரதன தேட, குழம்பியவாறே படுக்கைய விட்டு எழுந்து வெளியே வந்த குணாவிற்கு அதிர்ச்சி.

TN 60J 6058, அவளின் FZ பைக் வீட்டிற்க்கு வெளியே நின்று கொண்டு இருந்தது, அதில் வரதனின் டைரி ஒன்று பைக்கின் fuel tank கவரில் இருப்பது தென்பட்டது. டைரியின் முதல் பக்கத்தில்,
 

  “மனதில் கரைபவை யாவும் சுமையாகும், என்னுள் புதைந்த சுமையினை உன்னுள் இறக்கி வைக்கிறேன், இனி இவள்தான் (டைரி) என் சுமைதாங்கி..... சுருங்கச்சொன்னாள் “சு தா”........ “   
  
முதல் பக்கத்தில் இருக்கும் வரிகளின் வலிமையை உணர்ந்த குணா,  

        இனி இந்த “சு தா” தான் தனக்கு வழி காட்ட போகும் வழிகாட்டி என உணர்ந்தாள். வரதனின் இருப்பிடம் அறிய சு தாவை புறட்ட ஆரம்பித்தாள் குணா. ஒவ்வொரு பக்கமும் வாலிபன் ஒருவனின் தனிமை, ஏமாற்றம், விரக்தி, தோல்வி என ஒவ்வொன்றையும் கவிதை நடையாய் எழுதப்பட்டு இருந்தது. இடையே அருள் என்ற தலைப்பில் இருந்த விஷயம் குணவின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.........


 சு தா : குலசாமி நாகபூசனி அம்மன் கோவிலுக்கு போயிருந்தோம், அன்று நான் பால்குடம் எடுக்கவேண்டும். “மாப்ள சாமி வந்து ஆடுனாத்தான் கைல பால்குடத்தையே குடுபாங்க இல்லாட்டி நீ விரதம் சரியா இருக்களேனு ஊரே சொல்லும், அதனால ஒரு performance காட்டிரு.....” என்றான் நண்பன் அசோக்.

ஆனா நா விரதம் நல்லாதான் இருந்தேன், இருப்பினும் எனக்கு அருள்வந்து ஆடுவது என்பது நாமே நம்மை ஏமாற்றி செய்யும் செயல் என்றும் இது வெறும் மற்றவருக்காக நாம் செய்யும் கண்காட்சி என்றுமே தோன்றியது. அருள் பெறுவதை இப்போது பரிசோதனை செய்து பார்க்கும் சித்தம் அமைந்தது என்பதை உணர்ந்தேன்.

உறுமி முழங்க துவங்கியது, உச்சந்தலை முதல் பிட்டம் வரை உள்ள நரம்புகள் சிலிர்க்க துவங்கின. நாலு பேர் சேர்ந்தாற்போல் நாற்காலி ஒன்றில் என்னை அமறவைத்து வேப்பிலை கலந்த மஞ்சள் நீரை என் தலையில் உற்ற ஆரம்பித்தனர், உறுமியின் உறுமலும் வேகமெடுக்க ஆரம்பித்தது, உடல் முழுவதும் புல்லரிப்பு ஏற்பட்டது.


 மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் வரதா, இது வெறும் இசைக்கருவி மற்றும் இதர வஸ்துக்கள் செய்யும் லீலை அன்றி வேறொன்றும் இல்லை என்றது. மூக்கின் நுனி வரை கோபம் கொப்பளித்து கேள்வி கேட்ட மனதோரத்தை பற்களை துருத்தி நாகை கடித்த அது கேட்டது உன்மேல் இறங்கி இருக்கும் என்னை  சந்தேகப்படுகிறாயா...? பின்னர் ஒரு சிரிப்பு...... அந்த சிரிப்பில் சரணடைந்த மனமாணது, கண்களில் நீர் பெருகச்செய்தது. உடலெங்கும் பரவிய அருள் என்னை நிலையற்று ஆடச்செய்தது. சற்று நேரத்தில் நான் சற்பமாக கட்டுக்கடங்காமல் உர்ந்த துவங்கினேன். இறுதியில் பால்குடம் கையில் வாங்கியபின்னரே ஆச்சாரம் தவறாமல் நேற்திகடனை செலுத்த முடிந்தது.   

என்னுள் வந்திறங்கிய பேரானந்தமாகிய அம்மனின் அருளை அறிய, பலமுறை வள்ளிபுரம் செல்ல துவங்கினேன். அங்கிருந்த களிநாகன் என்கிற தாத்தா என்னை பார்த்து, நீ மாற நேரம் வரும்..... மாற நேரம் வரும்........ என கூறிக்கொண்டே இருப்பார். இது மேலும் எனது ஆர்வத்தை அதிகரிகத்துவங்கியது. அதன் பொருட்டு, அன்னையின் ஆதி அறிய அறிவியலையும், சரித்திரத்தையும், புராணங்களையும் ஒரு சேர அறியும் முயற்ச்சியில் இறங்கினேன். அன்னையின் வடிவமாகிய சற்பங்களை பற்றிய ஆய்வில் துடங்கியது எனது தேடல்........


 
 ·            தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்தபோது, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை வணங்க மறந்தனர், அதனால் வெளிவந்த  அமுதத்தை விநாயகர் திருக்கடையூர் கோவிலில் லிங்கமாக மாற்றிவிட்டார், அவ்வாறு மாற்றும்போது, சிதறிய அமுதத்தை சற்பங்கள் ருசித்தன, சீனம் கொண்ட விநாயகன் அவற்றின் நாவை  இரண்டாக பிளந்தான். இதனால் தான் சற்பங்கலுக்கு இன்றுவரை அதன் நாக்கு பிளவுபட்டுவுள்ளது. இருப்பினும் அமுதம் உண்ட காரணங்களினால் அவைகளுக்கு இறவாமை ஏற்ப்பட்டது, அதன் பொருட்டே அவை தம்மை தோலுறுத்து புதுப்பித்து கொள்ளும் தன்மையை பெற்றன.

·            சிந்து சமவெளி நாகாரிகம்(Indus Civilization) படி சற்பங்கள் அழியாமையின் (immortality) சின்னம் என்றழைக்கபடுகிறது. சற்பம் ஒன்று தன் வாலை கடித்தவாறு இருக்கும் இதனை ouroborous என்றழைக்கின்றனர் பண்டைய டிபேடியர்(tibetians). இதன் பொருள் முடிவற்ற, முடிவில்லா என்பதாகும்.
·            மேலும் சுஷ்ருத சம்கித என்கிற ஆயுர்வேத குறிப்பில், சற்பங்களின் விஷம் மூலம் குணபடுத்தக்கூடிய நோய்களை வகைபடுத்துகின்றனர்.


·            சற்பங்களின் நாகமணிகள் சர்வலோக நிவாரணி என்றழைக்கப்படுகிறது. இதனாலோ ஏனோ இன்றும் மருத்துவத்தின் சின்னங்களில் சற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
·            ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில், காட்டெருமை ஒன்று இனம் புரியா நோயினால் இறந்துபோனது, அதன் உடலில் இருந்து நோய் கிருமிகள் காற்றின் மூலம் பரவியது. இதனால் அவை மக்களிடையே வெகு விரைவாக பரவியது, சித்தம் கொண்ட பாண்டிய மன்னன் நோயின் வீரியத்தையும் அதற்கான மருத்துவத்தையும் வள்ளிபுரம் கல்வெட்டில் எழுதியுள்ளான். 

·         பாண்டியன் கூறிய நோய் எலும்புருக்கி, அதாவது TB. அதனை விஷம் கொண்டு முறித்திடுவோம் என்றால் நாக மாணிக்கம் கொண்டு சரி செய்து உள்ளனர். ஆனால் அதனை உருவாக்க விசித்திரமான வழிமுறைகளை கையாண்டு உள்ளனர், அவற்றை தெளிவாக என்னால் அக்கல்வெட்டின் மூலம் உணரமுடிந்தது.  
·         இன்றும் மத்திய இந்தியாவில் சஹ்யாத்ரி என்னும் பகுதியில் 1000திற்கும் மேற்பட்டோர் TB நோயினால் உயிர் இழந்துள்ளனர். அவர்களை தாக்கிய TBயானது, Multiple Drug Resistant, மற்றும் Extreme Drug Resistant தன்மையுடையது, இவற்றை சரி செய்ய பண்டைய முறையே சரியானதாகும்.  

     கோவிலின் கல்வெட்டில், மேற்கு தொடர்ச்சி மலைக்கு, வள்ளிபுரத்தில் இருந்து குறுக்கு பாதை இருப்பதாகவும், அங்கு இருக்கும் மூலிகைகள் நாக மாணிக்கதுளியுடன் சேர்த்தால் எலும்புருக்கி நோயிக்கு நன்மருந்தாகும் என்று குறிப்பு உள்ளது.

   சு தா தந்த தகவல்கள் போதுமானதென்று எண்ணிய குணா, மனதினுள் முடிவொன்றை எடுத்தாள். விஷயம் புரிந்தவளாக வள்ளிபுரத்திற்கு வண்டியை எடுத்தாள் குணா. அங்கு சென்று என்ன செய்ய போகிறோம், மேற்கு தொடர்ச்சி மலை என்று வரதன் கூறினானே, இந்த சு தாவிலும் அதை பற்றியே குறியிருக்கிறான் என்று எண்ணியவாறே வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தாள். தீவிர சிந்தனையில் இருக்கையில், sir இந்த வரதன் அப்டி எங்கதான் போனான், உண்மையாவே நாகமாக மாறிடான, இல்ல இது எல்லாம் அவன் மன பிரம்மையா driver சுப்பு கேட்ட கேள்வி கதையை எழுதி கொண்டு இருக்கும் நந்தனின் சிந்தனை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டார் போல் இருந்தது.

இதுக்குமேலயும் இந்த கதையை பத்தி யோசிக்க முடியல சுப்பு, அதனால தான் நாம நேராவே இப்போ வள்ளிபுரம் போறோம், அங்க போனாலாவது எழுத ஏதாவது விஷயம் கிடைக்குமா என்று பார்போம். நந்தனின் வார்த்தைகளில் தோல்வியை ஒப்புக்கொண்ட தோரணை தெரிந்தது. 

பீப் பீப் பீப் பீப் பீப்................... (horn ஒலிக்கிறது)

யாருடா இவன் நொச்சு நொச்சுனு என்று tension ஆன சுப்பு, பின்னே வந்த பைக்கிர்கு side விட்டான். அந்த பைக் முன்னேறி செல்ல செல்ல நந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது....... 

ஆம் அந்த பைக் TN 60J 6058, அதுவும் FZ அதனை ஒட்டிசெல்வதோ ஒரு பெண்...............

                           சித்தம் இருந்தால், சித்தம் தொடரும்............ 

Sunday, March 4, 2012

சித்தம்.......

                                                                    
                             சித்தம்.......   இன்று


இதுவரை:

வரதன் ஒரு இலக்கியவாதி, அரசு கல்லூரியில் பணிபுரியும் ஒரு புதுமை விரும்பி....

குணா – தனியார் தொலைகாட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி. எதையும் எதிர்கொள்ளும் துணிவுகொண்டவள்.....

FACEBOOK என்னும் வடிகால் வழியாக குணாவை சந்திக்க விதிக்கப்பட்டான் வரதன்...

விதிக்கப்பட்ட இடம் : ஆவின் தேநீர் கடை, ஆரபாளையம் – மதுரை.

இனி:

இருவரும் தங்கள் வேலை முடிவுற்ற பின்பு எந்த ஒரு புற அங்கங்களுக்கும் செயற்கை சேர்க்காமல் மெய் புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டனர் அந்த முதல் சந்திப்பில்.....

சொல்லுங்க வரதன் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு கூப்டிங்க... Sorry no formalities, ஒரு hai கூடசொல்லாம இப்டி straightடா matter open பண்ணுறேனு தப்பா நினைக்க வேணாம், இதுதான் என்னோட style….
கொஞ்சம் அதிக பிரசங்கிதனமா பேசுறேனு நினைக்காதீங்க.... 

உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.என்னதான் நான் இலக்கியம் படித்தவன்னாலும், என்னால மெய் பேசுற உங்க கண் கிட்ட பொய் பேசுற கவிதய சொல்ல முடியல...

 எனக்கு இந்த Coffee shop, Pizza hut, இங்கலாம் கூட்டிட்டு போய் உங்கள பத்திதெரிஞ்சுக்கண்ணும்னு துளி கூட ஆசை இல்ல... 
பயபடாதீங்க....பார்த்த உடனேயே கல்யாணம் பண்ணிக்கோனு கேக்குற அரகுற ஆல் இல்ல நான்... ஆனா உங்கள miss பண்ணிட கூடாதுன்னு மனசு சொல்லுது. உங்களுக்கு சம்மதம்னா நாம பழகிப்பார்க்கலாம்னு தோணுது.....

        இரண்டு வினாடி மௌனதிற்கு பின்பு ஏற்றிய புருவத்தை இறக்கினாள் குணா. எல்லாம் சரி..... எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.....
நமக்கு செட் ஆகலேனா இனிமேல் நாம சந்திச்சுகவே வேண்டாம். ஆனா, ஒரு வேலை நமக்கு பிடிச்சுபோய், அதுவும் கல்யாணம் வரை போனால், நா பாக்குற வேலய வீட்டுட சொல்லுவியா நீ....  

“யார் ஒருத்தன் பிடுச்ச வேலைய செய்யுறானோ அவன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.. எவன் ஒருவனுக்கு பிடிச்ச வேலைய அவன் மனைவி செய்கிறாளோ அவங்க வாழ்க்கை அழகாக இருக்கும்...” எனக்கு உங்களோட profession ரொம்ப பிடிச்சு இருக்கு குணா. 

ம்ம்.......கவித.... கவித...... Please தயவு செய்து வாங்க போங்கணு சொல்லி பேசாத.... நீ அப்டி பேசுறது, என்னயும் அப்டி பேச சொல்லி indirectடா order போடுற மாதிரி இருக்கு... and I am not convenient with that…..
I used to be unpredicted, and i love to follow that……. So, நாம பழகுறதுக்கும் அப்டி ஒரு விஷயம் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. எனக்கும் இந்த Coffee shop, Pizza hut இதுல எல்லாம் உடன்பாடே இல்ல.......

வரதன் வேணும்னா இப்டி பண்ணலாம்..... நாளை மறுநாள் ஒரு program இருக்கு... அதுவே நமக்கான களமாக கூட அமையலாம்... தயவு செய்து என்னணு கேட்காத சுவாரசியமே இல்லாம போயிடும்........

சரிங்க அம்மணி அப்டியே செய்யுறேன்.... என்று கூறிய வரதனை பார்வையால் வதம் செய்து விடைபெற்று சென்றாள் குணா..   

        


அன்று

சுமார்8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு.....

               
           சிலோன், இந்திய திருநாட்டின் ஒரு அங்கமாக இருந்தநேரம்.. நாகேந்திரவர்மன் என்னும் சிற்றரசன் தென்கரை கொண்ட பாண்டியன் என்ற பேரரசனின் துணை கொண்டு சிலோனை ஆண்டு வந்தான்.
நாகேந்திரவர்மணின் குலதெய்வம் நாகபூசணி அம்மன், ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நாகபூசணி அம்மன் நாக பஞ்சமி அன்று சற்ப உருவில் வந்து மாணிக்க கல் ஒன்றை வெளிப்படுத்துவாள்.... அப்போது அந்த கல்லில் இருந்து வெளிவரும் ஒளி படும் இடம் எல்லாம் உயிர் சக்தி ஊட்டப்படும், எதிர் வரும் எதிரியும் நட்பு பாராட்டி செல்லும் வல்லமை கொண்டது அவ்வொளி. சக்தி வாய்ந்த அக்கல்லை அம்மனுக்கு சமமாக வணங்கி வந்தனர் அம்மக்கள்.

            
 
அந்த மாணிக்க கற்களை பாதுகாக்க தென்கரை கொண்ட பாண்டியன், விசுவாசமிக்க ஒரு குடும்பத்தையே நியமித்திருந்தான் – அவர்களை “நாகா” என்று அழைத்தனர். அவற்றை கவர வரும்யாவரும் குறுகிய காலங்களில் துற்மரணத்தையே எதிர் கொண்டனர்.
காலங்கள் கடந்தோடின.... நாகா வம்சத்தினர், கவசமென காத்து வந்தனர் மாணிக்க கற்களை......

ஏறத்தாள 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் மூழ்கியது சிலோன் (எஞ்சி இருந்தது இன்றைய இலங்கை மட்டுமே.....), மூழ்குவதற்கு சில காலங்களுக்கு  முன்னர், நாக பூசணி அம்மனின் ஆணையின் படி நாகா வம்சத்தின் கடை வாரிசு சுந்தரநாக வரதன் மாணிக்க கற்கள் அடங்கிய பொக்கிஷ பெட்டியுடன் மதுரையை அடுத்த வள்ளிபுரம் சென்றான். வழி எங்கிலும் சற்பங்கள் காவலாய் துணையாய் வந்தன......

அதே பொழுதில் மதுரையை ஆர்ய படைகள் முற்றுகையிட்ட நேரம்........
அன்றிரவு மதுரையை ஆண்ட உக்கிர பாண்டியனின் கனவில்.... தென்னாவரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் ஆலயத்தில் அரசன் கொண்ட குழப்பத்திற்க்கு விடை உண்டுஎன்று அசரீரு ஒலிக்க கேட்டான்.....    
        
தென்னாவரம், மதுரையில் இருந்து மேற்கே 40 மைல் தொலைவில் உள்ளது... அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தான் எந்த ஒரு முக்கிய பிரச்சனைக்கும் அரசன் ஈஸ்வரனின் துணை கொண்டு குறி கேட்டு, முடிவெடுப்பான்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு வாசல் உட்புறம் நீண்ட தூண் ஒன்று உள்ளது அதுதான் தென்னாவரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டிய ரகசிய வழியின் நுழைவாயில்....
 மதுரையில் இருந்து தென்னாவரம் செல்லும் வழியில் இருப்பதே வள்ளிபுரம்...........

     


இன்று    – நாக பஞ்சமி.......  
  
சற்றும் வரதன் எதிர்பார்க்கவில்லை, குணா FZ பைக்கை ஓட்டி வருவாள் என்று.. இருப்பினும் தான் கொண்ட ஆச்சர்யத்தை வெளிக்காட்டாமல் அவளிடம் கேட்டான், அப்பறம் நாம எங்க போகபோறோம்....
தெரியல....இந்த பைக்குல தோறாயமா  1.5 litre Petrol இருக்கும்போல.... வண்டி எங்க நிக்குதோ அந்த இடத்தில் இன்னைக்கு நாம evening spend பண்ணுவோம்…. அப்புறம்....

கொஞ்சம்பொறு மிச்சத்தை நான் சொல்லுறேன்..... அப்புறம் அப்டியே காலாரா நடந்து petrol வாங்கிக்கிட்டு return வரணும், அந்த நேரத்துல interestinga பேசிட்டு வரணும், அவ்வளவு தானா குணா.......

எனக்கென்னமோ நமக்குள்ள set ஆகிடும்னு தோணுது...... வரதன் இந்தா வண்டியை நீ ஓட்டு......

ஐயையோ எனக்கு Gear வண்டியெல்லாம் ஓட்டத் தெரியாது பா.... அப்போது அவள் முகத்தில் வந்தசந்தோசத்திற்கு காரணம் - தான் கூறிய பொய் என்பதில் சற்றும் கர்வம் கொல்லாதவனாய், அவளை ரசித்தவாறு அவளிடம் வண்டியை ஓட்ட கூறிவிட்டு பின்னிருக்கையில்அமர்ந்தான் வரதன்.....
Full stop வைக்கமுடியாமல்,                                                            etc., வாக தொடர்ந்து கொண்டிருக்கிறது......                                                       இவள்மீது நான் கொண்ட காதல்....”                     
     இத இவட்ட சொன்னா என்ன செய்வா..... என்றுயோசனை செய்து கொண்டு இருக்கையில்....... ½ மணி நேர பயணம் முடிவுற்று இருந்தது - 

நக்கலபட்டி என்றொரு ஊர் வந்தது..........

வரதனின் கவனத்தை வெகுவாக திசை திருப்பியது அவர்களை கடந்து சென்ற இளம் பெண்களின் கூட்டம். வண்டியின் கண்ணாடியில் வரதனின் அசைவுகள் அனைத்தையும் கவனித்தவாறு வந்தாள் குணா...

என்ன வரதன் site கூட வரும் போதே site அடிக்கிறாப்டி போல.....

சே சே.....
“பிறர்மனை நோக்கின் சதுக்க பூதத்தால் புடைத்துண்ணப் படுவர்”

ஐயாஇலக்கிய வரதா..... என்ன தான் சொல்ல வரீர்....

அங்க போன பெண்கள் எல்லாரும் புதுசா க