Tuesday, December 20, 2011

அடியேனின் பார்வையில் இறைவன்...



விடை இல்லா கேள்விகளின் பிள்ளையார்சுழி,
“இறைவன் உண்டா, உண்டெனில் அவன் உருதான் என்ன...?”




குருடருக்கும் உருகொண்டு காட்சியளிக்கும் இறைவன்...
இறை உருதேடும் பகுத்தறிந்தவனுக்கு என்றும் அவன் இல்லாதவனாகவே தென்படுகிறான்.  
இன்னாரின் மகன் இன்னார் என்பதை கண்டறியும் கருவியை கண்டறிந்த மனிதனுக்கு, இவ்வுலகின் என்னாரும் யாருடைய மக்கள் என்பதை கண்டறியும் கருவியை கண்டறியும் வரை இத்தேடல் முற்று பெறா.....

“கற்றது கையளவு
கல்லாதது கடவுள் அளவு....”   

தண்ணீருக்காக சக மனிதனை உணராத மக்களின் - தன்னிகரில்லா இறைவனை உணரும் முயற்சியும் உண்மையோ..?
நான் இயங்க தேவைப்படும் சக்தி என்னிடம் உள்ளது – என்கிற பிரம்மை ஒளிந்து அந்த சக்தியே இறைவா நீ என்பதை மனமுருகி உணரும் வரையில், இறைவனின் பாத நிழலை கூட நாம் காண இயலாது.....




     “நான் என்று ஏதுமில்லை, இறைவா
     நீயின்றி எதுவுமே இல்லை....
    உன்னை அடைய – இதோ
      உன்னிடமே சரணடைகிறேன்....
                                       இறைவா................”           



Translate to Ur Mother Tounge

What Are These? | Blog Translate Gadget