Tuesday, December 20, 2011

அடியேனின் பார்வையில் இறைவன்...விடை இல்லா கேள்விகளின் பிள்ளையார்சுழி,
“இறைவன் உண்டா, உண்டெனில் அவன் உருதான் என்ன...?”
குருடருக்கும் உருகொண்டு காட்சியளிக்கும் இறைவன்...
இறை உருதேடும் பகுத்தறிந்தவனுக்கு என்றும் அவன் இல்லாதவனாகவே தென்படுகிறான்.  
இன்னாரின் மகன் இன்னார் என்பதை கண்டறியும் கருவியை கண்டறிந்த மனிதனுக்கு, இவ்வுலகின் என்னாரும் யாருடைய மக்கள் என்பதை கண்டறியும் கருவியை கண்டறியும் வரை இத்தேடல் முற்று பெறா.....

“கற்றது கையளவு
கல்லாதது கடவுள் அளவு....”   

தண்ணீருக்காக சக மனிதனை உணராத மக்களின் - தன்னிகரில்லா இறைவனை உணரும் முயற்சியும் உண்மையோ..?
நான் இயங்க தேவைப்படும் சக்தி என்னிடம் உள்ளது – என்கிற பிரம்மை ஒளிந்து அந்த சக்தியே இறைவா நீ என்பதை மனமுருகி உணரும் வரையில், இறைவனின் பாத நிழலை கூட நாம் காண இயலாது.....
     “நான் என்று ஏதுமில்லை, இறைவா
     நீயின்றி எதுவுமே இல்லை....
    உன்னை அடைய – இதோ
      உன்னிடமே சரணடைகிறேன்....
                                       இறைவா................”           Saturday, September 24, 2011

ஒரு மூடி.......


ஒரு மூடி இது ஒரு பயணம், Non-Alcohol இல் இருந்து......... நான் Alcohol வரை.......


மூரட்டு மீசை,
GYM Body,
நெஞ்சு முடி,
பேசும் போது 2 கெட்ட வார்த்த,
அப்றோம் கடைசியா தண்ணி அடிக்கிறது.........


இதெல்லாம்தான் கடைசி bench don குரூப்பில் சேர்வதற்கான Qualifications.
முதல் பெஞ்சும் அல்லாத கடைசி பெஞ்சும் அல்லாத நம்ம கோவாலு, தன்னை நிலை நாட்டிக்கொள்ள Don
குருப்போடு Tag செய்து கொள்ள முடிவு செய்தான்......


மூரட்டு மீசை,GYM Body,நெஞ்சு முடி, இந்த 16 வயசுல ரொம்ப கஷ்டம்..
கெட்ட வார்த்த கூட நம்ம ஊத்த வாயன் Chemistry வாத்தியான கும்பலோட கும்பலா,
தேமா..... புளிமா.....னு அட்டாக் பண்ணி Gangoda mingle ஆகிவிடலாம்.


But அந்த கடைசி Benchula சேர... கடைசி task சற்றே கஷ்டமானதுதான். ஆமா புதுசா குடிக்க போரோம்....
ஊழற கூடாது, வாந்தி எடுக்க கூடாது, ரோட்டுல தஹராறு பண்ணக்கூடாது,
இதுல ரொம்ப முக்கியமானது ----- வீட்டுல மாட்டிக்க கூடாது.
அதுவும் Special Crime Branch அம்மா கிட்டமட்டும் மாட்டிக்கவே கூடாது.

பத்தாவது படிக்கிற கோவாலு, தனக்குள் ஒரு கொள்கை வகுத்து கொண்டான்....

  • No Hot.... Only Beer....
  • அதுவும் 1/2 Beer தான் (அப்போதான் Controlaa இருப்போம் )
  • குடிச்சுட்டு 5 hrs கழிச்சுதான் வீட்டுக்கு போனும்.
வகுத்துக்கொண்டு இருக்கும் போதே மகிழ்ச்சி பெருக்க வந்தான் சுந்தரம் மகன் சுரேசு
(அப்பன் பெயர் சொல்லி பையனை அழைப்பது "மாப்ளை Benchin குல வழக்கம்..) 

சுந்தரம் மகன் : டேய் பங்காளி ஒச்சு மகனுக்கு (சாராய வியாபாரியின் பையன் - கொடிராஜா) நாளைக்கு பிறந்தநாள்.
அதனால நாளைக்கு சரக்கடிக்க ரயில்வே stationiku வந்திடு...
 (இது treat மட்டும் இல்ல எனக்கு வைக்கப்பட்டு இருக்கும் Qualifier.......)


10.02.2002 - மதியம் 2.00pm
Railway Station Corneril இருந்து...
மாப்ளை பெஞ்ச் சகாக்கள் - பங்கு ரமேஷ், சுந்தரம் மகன், ஒச்சு மகனுடன் கோவாலு.......


மறைத்து வைக்கப்பட்டு இருந்த 1/2 bottle பையை விட்டு வெளியே எடுத்தவுடன்,
 பிறந்த குழந்தையை ஆர்வமாய் பார்ப்பது போல பார்த்து கொண்டுருந்தேன்...
மனதிற்குள் ஒரு ஐயப்பாடு.... 
இத்தனை நாள் காத்து வைத்திருந்த கற்பை இன்று இழக்கப்போவது போல் ஒரு நெருடல்...

குடிக்கலேனா இவனுங்க நம்பள தர்ம ஓட்டு ஓட்டுவாணுக.... குடிக்கவும் மனசே இல்ல...
ஏற்கனவே இவனுங்க அர போதைல இருக்கானுங்க.....
எப்டியாவது situationa சிசேரியன் பண்ணாம காப்பாதிடுடா கோவாலு..........


கோவாலு : Beer இந்த மாதிரி bootle ல வருமா என்ன? எனக்கென்னமோ இது hotunu நினைக்குறேன் ....
பங்கு ரமேஷ் : பங்காளி பை சின்னது டா அதனாலதான் இந்த பாட்டில்ல ஊத்திடு வந்து இருக்கான் ஒச்சு மகன்...
கோவாலு : கேக்குறவன் கேன பு............. K.R. விஜயா ..............
(கஷ்டப்பட்டு ஒரு கெட்ட வார்த்தை flowaa வந்தது என் சென்னாவிலே முதல் முறையாக .......)
                         டேய் சுந்தரம் மகனே இந்த இத குடிச்சுட்டு சொல்லு இது hotaa இல்ல Beeraanu ?

முழு 1/2 bootle தன்னை இப்போது குறைகுடம் போல் காட்சி தந்தது ... 
அதனாலையோ என்னமோ கூத்தாட ஆரம்பித்தான் சுரேசு........

சுந்தரம் மகன் சுரேசு : ஆமா பங்கு அப்டிதண்டா தெரியுது......

கில்லி விட்ட பிள்ளை போல சுரேசு சினுங்க,
 தொட்டிலை ஆட்ட தயாரானான் அர போதையில் இருந்த ஒச்சு மகன்........ 

மீதம் இருந்த அரை 1/2 பாட்டில்.......
கொடிராஜாவின் செயலால் நிலத்தடி நீர் போல் தரை தட்டி நின்றது கண்ணாடி பாட்டிலில் ......

கோவாலு : அடப்பாவிகளா முடிசிடிங்கலாடா.....
(சூழ்நிலையை சமாளித்த சந்தோசம் இருந்தாலும்....
அந்த கருமோம் எப்படி இருக்கும் என்ற ஆசை பேய் தனது Inningsai ஆட ஆரம்பித்தது...)
கோவாலு : ...தா குடிகார பு....... செஞ்சுடீங்கலே டா......
சரி போய் தொலைங்கடா..... இவன் பிறந்தநாளைக்கு குடிக்காம போன அது நல்லா இருக்காது.....
இருக்குற சரக்கயாவது குடுங்க டா...

சரக்கை அளந்து பார்த்ததில் ஒரு மூடி இருந்தது....
அத அப்டியே Royalaa உள்ளே அனுப்பியதில் ஏற்பட்ட Kicku.......


"ஒரு மூடியோ,  half O......
அதை அடிபவரின் மனதை பொறுத்தே -
போதையின் அளவும் நிர்ணைக்கப் படுகிறது......"
Translate to Ur Mother Tounge

What Are These? | Blog Translate Gadget
There was an error in this gadget