Monday, October 18, 2010

To : My Figure.....

To,
     My Figure.....
         கண்ணா பின்னான்னு  காதலிச்சவன - கண்டுக்காம  இருப்பவளுக்கு, 
போதும்டா சாமினு சொல்ற அளவுக்கு உன் நினைவுகளை மட்டும் நினைவாய்  தந்தவளே.... இன்னைக்கு march 10 உன் பிறந்தநாள், இத்தோட 4 வருஷம்  gift வாங்கி வச்சதோட சரி - கொடுத்த பாடில்ல. உனக்கு gift வாங்கிய  அந்த காசுக்கு குடிச்சிருந்தா  வாலி நிறையா வாந்தியாவது  எடுத்து இருப்பேன், இப்டி என் ஜோலிய காலி பண்ணிட்டு நீ பாட்டுக்கு ஜாலியா இருப்ப, நா உன்ன நினைச்சுக்கிட்டு........அஹ், 
நீ outtime வர்ற time அ correct பண்ணி, என்னோட outtime அ cut பண்ணி  ச்சே நாய் பொழப்புடா... 
  
    வேணாம் இத்தோட நிறுத்திக்கிறேன், உன்ன பத்தி நினைக்குறது, பார்க்குறது, பேசுறது, எழுதுறது, யோசிக்கிரறது, - கதம்..கதம்...   

    இந்த நாலு வருசத்துல, உருபிடியா படிச்சுருந்தா... 1lakh engineerla நானும் ஒரு  engineer ஆகி இருப்பேன், உன்ன பார்க்குறதுக்கு பண்ண செலவ சேர்த்து  வச்சு இருந்தா  - ஒரு  yamaha FZ bike ஆவது வாங்கி இருப்பேன்.....
எல்லாமே ஒரே  ஏமாத்து வேலை, எத சொல்றேன்னு கேட்குரியா - அதான் நீ வரும் போது கம கமனு வாசம் வருமே... அது உனக்கு சொந்த மானது கிடையாது, அந்த பெருமை மல்லிகை பூவுக்கு உரியது -  அதான் சொன்னேன்  எல்லாமே ஒரே  ஏமாத்து வேலை......

   ஆனா பாரு இவ்வளவு கருமமும் Detailலா  தெரிந்த எனக்கு, உன்ன  Drop பண்ண எனக்கு மட்டும் தெரியல.....
   Please கொஞ்சம் முயற்சி பண்ணு என்ன love பண்ண....  


பின் குறிப்பு :  
        சத்தியமா சொல்றேன் இந்த letter உனக்கு propose செய்வதற்காக எழுதப்பட்டது.....
suppose இது உன் மனதை புண் படுத்தியது என்றால், அதை Dettol ஊத்தி கழுவி, அப்டியே கொஞ்சம்  Burnol அல்லது Tinger வகை வஸ்துக்களை போட்டு சரி செய்துக்கொள்ளவும்......

                                                                                      இப்படிக்கு,
                                                                                     Yours lovingly (?)
                                                                                    பாசகார பயபுள..
      

                  

Friday, October 15, 2010

2120.....

 2120.....
(The forecasting)

31.02.2120/ Caplix உலகத்தில் இருந்து...

kமலா:
          என்ன சாவி3 உன் பையன் இந்த தடவ first rank ஆம்ல... congrats.

சாவி3:
         அது இருக்கட்டும் உன் பையன் k7lpw8r (new(nu)merology) school ல சேர்த்துடியா..

kமலா:
          இல்லடி......

  சாவி3:
          என்னடி pregnant ஆகி 3 மாதம் ஆகுது, இன்னும் admission போடலனா  அவ்வளவு தான் உன் பையன் schooling  கஷ்டம் தான்.  என்ன பாரு இப்ப எனக்கு 9 மாசம் என் பையன் 2 std முடிச்சிட்டான்... கண்டிப்பா அவன் 8 வயசுல engineering முடிசுடுவான்...

 kமலா:
             .....?????
      (2012 இல் உலகம் அழிவை சந்தித்தது, அப்போது ஒரு  space ship இல் தப்பிச்ச மிச்ச சொச்ச மனித இனம், Caplix  என்னும் உலகத்தை கண்டறிந்தது....   
இன்று அதன் வயது 2120.....

welcome to the synthetic world "Caplix......"

தாத்தா:( வயது - 225 *)
         டேய் பேராண்டி அந்த news plastic  ஐ  [(news paper-அன்று ) - சர்வமும் synthetic மயம்...] எடுத்துட்டு வா... அப்டியே கொஞ்சம் தண்ணி கொண்டு வா...

பேரன் தினகுரன் (news  plastic ) கொண்டு வந்து தாத்தா விடம் கொடுத்தான்....

இனி synthetic உலகம் - caplix  news : தினகுரனிளிருந்து.....

முதல் பக்கம்:
            தமிழ்நாடு இனிமேல் செந்தமிழ்நாடு என மாற்றப்படும் - யேன மு.க.ஆ.த.க.சு.நா.பா.நா. குருனாசதி அறிவிப்பு....
             பதில் அறிவிப்பாக - மாண்புமிகு செந்தமிழ்நாடு என மாற்றப்படும் - யேன
ஜெ.ஜெ. ர. பா. தி.கொ. சு.   லலிதா கதறுகிறார்......   

( எது மாறினாலும் இவனுங்க மாறப்போறது இல்ல...  யேன முணுமுணுத்தார் தாத்தா ...).

advertisement:
          sunflower pics பெருமையுடன் வழங்கும் சூத்திரன் .......  சூத்திரன் .......  சூத்திரன் .......
( படிக்கும் போதே news plastic அலறுகிரது 17 G technology பயன்பாட்டின் படி )
இப்போது வெற்றி நடை போடுகிறது.....
இந்த படம் உங்கள் வீட்டில் release செய்ய இன்றே முன் பதிவு செய்யுங்கள்...

தாத்தா:
            இவனுங்க  படம் பார்கலனா, காத கடிச்சு துப்பிருவாணுக போல...

            டேய்   k7LPW8r (பேரன் ) தண்ணி கேட்டேனே என்ன ஆச்சு.....

  பேரன்:
           தாத்தா கொலாவில  வெறும் gas (காத்து) தான் வருது....  
 
 தாத்தா:
            என்னடா பண்ண, அந்த H button அ ரெண்டு தடவையும் O button அ ஒரு தடவையும் தான அமுக்கின...(H2+O).....

பேரன் :
         ஆமா தாத்தா அப்டி தான் பண்ணினேன் இது வேற மாதிரி ஏதோ software problem போல.....

 தாத்தா: சரி விடு அப்பறம் பாப்போம் அத...

  வானிலை அறிக்கை...
               இன்னும் இரண்டு நாளைக்கு செயற்கை மழை பெய்யப்படும் யேன அரசாங்கம் அறிவிப்பு...

கடைசி பக்கம்: 
          மேலும் தொழில் சாலை அமைத்திட - Earth க்கு வாங்க (now its get renewed.....)
உடனே  உங்களுக்கான   இடத்தை முன் பதிவு செய்யுங்கள்..

back to 2010... / the Earth......
          
             இயற்கையை நாம் அளிப்பதால் வருவதே -   இயற்கை சீற்றம்....
            ஒரு வேளை அதுவே நாளை செயற்கை சீற்றத்திற்கு வித்திடலாம்...                            -   
அதனால் என்ன நடக்குறது நடந்து தானே ஆகும்
                                       
                                              by : One of the irresponsible idiot......
          

 
   

Monday, October 4, 2010

சொல்லித்தொலைங்க டா.....


தீயா இருப்பா,
chance a இல்ல,  
அப்டி ஒரு பொண்ணு தான் கீரத்தீ....

அவளோட கண்ணு power -ve தான் ஆனா அவ specks போட்டதாலையோ என்னமோ
செம +ve look இருக்கும் அவகிட்ட..... 
அவ எவ்வளவு அழகா இருப்பானா...
no no....  அவ அழக எது கூடவோ, இல்ல யார் கூடவோ  நா compare பண்ண போறது இல்ல.
Because அவ பண்ற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயம் கூட, like- அவ நடக்குறது, சிரிக்கறது, கோபப்படறது, etc., இப்டி எந்த விசயமானாலும் அதுல எனக்கு எப்படி react பண்ணா பிடிக்குமோ - அத note பண்ணி அவ follow பண்ற மாதிரியே இருக்கும்...
But fact என்னானா.... அவளோட இயல்பே அதுதான்.
( is she - specially invented for me?)

ஒரு பொண்ணு  எவ்வளவு அழகா (மட்டும்) இருந்தாலும் - ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல நமக்கு அவகிட்ட இருக்குற ஈர்ப்பு குறைஞ்சிடும்....
But see, she is still Beautiful...> 4 வருஷம் ஆச்சு,
அவல முதல் தடவ பார்த்தப்போ  கிடைச்ச feel - ஒவ்வொரு தடவையும் பார்குறப்போ எனக்கு கிடைக்குது....

I think this is definitely the love.....

அவ ரொம்ப அழகு அப்டிங்கிற விஷயம் இன்னும் அவளுக்கே  தெரியல போல...
ஏன்னா அவ....
இப்ச்...
simpulaa சொல்லனும்னா அவ மெய்யாக பெண் மட்டும்.....
தலைவர் பாஷைல சொல்லனும்னா...
                      "சாத்விகம் டா..."

Mr.Public:  எல்லா சரி நைனா..
                  கட்சியா என்ன convey பண்ண வர...

நான்: நாளைக்கு சனிக்கிழமை,
            எப்டியும் அவ பெருமாள் கோவிலுக்கு வருவா....
           எப்டி ஒரு beer, + ஒரு cutting போட்டா யாரோ நம்மள தொட்டுள ஆட்டுற மாதிரி இருக்கும் - அது மாதிரி effect கொடுக்குராப்ள ஒரு letter எழுதிரிக்கேன்....

சத்தியமா அவ flatu - இத படிச்சானா......

ண்பேண்டா:
மச்சி... சத்தியமா நீ flatu, அத அவங்கப்பன் படிச்சா..

நான்: 
நாளைக்கு மட்டும் எல்லாம் ok ஆகட்டும் -  உனக்கு சரக்கு மச்சி.....
   
ண்பேண்டா:
கடவுளே இதுக்காகவாவது இவனோட இந்த நாலு வருஷ போராட்டம் ஒரு முடிவுக்கு வரணும்....

Saturday 7.20 p.m. - Tasmac-இல் இருந்து.....

நான்:
இந்த பொண்ணுங்களே இப்டிதானா மச்சான்....?

ண்பேண்டா:
ஊத்திகலாம்னு வந்தா - இப்டி ஊத்திக்கிச்சுன்னு சொல்றியே டா....
நீ over feel ஆகி அழுகுறதுக்கு முன்னாடி mattera  சொல்லிடு...
 நான்:
அவள பார்க்கபோரோமேன்னு, உன்னோட அந்த 1500/- shirta போட்டுக்கிட்டு 5 மணில இருந்து வெயிட் பண்ணேன் டா..
மணி 6 ஆச்சு...
அவ அம்சமா, அழகா, அமைதியா....
ண்பேண்டா:
டேய்,
lettera குடுத்தியா இல்லையா...?
நான்:
அப்டியே வந்தாளா .....
கூடவே அவங்கப்பனும் வந்தான்...
இருந்தாலும் சனிஸ்வரர் அப்டியே கொஞ்சம் side விட்டதால, அவ தனியா கோவில சுத்த ஆரம்பிச்சா...

run மாதவன், காதல் மன்னன் அஜித் இப்டி  ஓடுகாளி காதல் தெய்வங்கள மனசுல நெனைச்சுக்கிட்டு..... இருக்குற தைரியத்த எல்லாம் மனசுல ஒன்று தெரட்டி....

"கீர்த்தி..." அப்டின்னு மட்டும் தான் கூப்பிட்டேன் அது எனக்கே கூட  சரியா கேக்கல....
ஆனா அத அவ கேட்டுட்டா.....

Just 2 secs,
இந்த நாலு வருசத்துல பேசாத  எத்தனையோ வார்த்தைகள எங்களோட கண்கள் பேசிருச்சு.......
சத்தியமா மச்சி நா வேற எதுவுமே  பேசல....
ஆனா அவ, அந்த lettera வாங்கிக்கிட்டா டா...


ண்பேண்டா:
ரசகுலாவுல ரசம் ஊத்தி சாபிடுறவன் நீ...
பின்ன எப்படி இப்டி.... அதுவும் romantica ...

கண்ணீருடன் நான்: 
lettera படிச்சிட்டு அவ ....
அண்ணா கவிதை supernu  சொன்னாடா...

அப்டியே எனக்கு தூக்கமே கலைஞ்சிடுச்சு மச்சி....
கனவுல நடந்ததெல்லாம் பலிசுருமோனு பயமா இருக்கு டா....


ண்பேண்டா:

நீ எல்லாம் வேடிக்கை பார்கத்தான் டா லாயக்கு...

love பண்ணா அந்த பொண்ணுங்ககிட்ட சொல்லுங்க டா.....
ஏன்டா எங்க கிட்ட சொல்லுறீங்க.....
போங்க டா போய் சொல்லித்தொலைங்கடா..

Mr.Public:
சொல்லித்தொலைங்கடா..
           சொல்லித்தொலைங்கடா.. ..
                         சொல்லித்தொலைங்கடா..........
   

Sunday, September 26, 2010

சதக் சதக்....

சதக் சதக்....


 இங்கு இருந்து தப்பிபேன்னு தெரியல, ஏனா நான் அவ்வளவு சித்ரவதை செய்யப்பட்டு இருக்கேன்... நா இன்னும் அர மயக்கத்துல  தான் இருக்கேன்... ஆனா என்ன கட்டிபோட்டு இருக்கறத மட்டும் என்னால உணர முடியுது...

  நடக்கபோரத நினைக்கும் போது Heart beat மணிக்கு 72க்கு பதிலா 720 தடவ துடிக்குது...

எல்லோரையும் போல நானும் சந்தோசமா தான் இருந்தேன், ஆனா ஏன் திடிர்னு இப்டி ஆஹிடேன், ஒரு வேலை அவனுங்க என்னை கொன்று வாங்களோ....?

ஹம்..... நன்றி மறந்தவணுக ... இவனுங்களுக்காக எவ்வளவு கச்டபட்டுருபேன், விசுவாசம் என்ற வார்தையோட எல்லைவரை உழைத்து இருப்பேன், இன்னும் சொல்லனும்னா என்னை கொள்ள நினைக்குற இவனுங்களுக்காக, யாருமே இளிவா நினைக்குற விபச்சாரம் கூட பண்ணிட்டேன்.....

சதக்...சதக்....
சதக்...சதக்.... ஆ..... அம்மா....( அலறல் சப்தம்...)

ஆமா அது என்னோட நண்பனோட குரல் தான்... அடப்பாவிகளா, துரோகிகளா, எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத அவனை போய் கொன்னுடிங்கலேடா
பச்சை துரோகம், நம்பிக்கை துரோகம், பட்டியல உங்க பெயர தாண்ட  முதல எழுதனும்.

அந்த ரத்த வாட என்னோட மயக்கத்த தெளிய வச்சது, அநேகமா அவங்களுட அடுத்த குறி நான் தான்...yes இப்போ அவன் அந்த ரத்த கர கொண்ட கத்தியோட என்ன நோக்கி தான் வர்றான், நா தப்பிபேனு எனக்கு தெரியல ஏன்னா அதுக்கான நம்பிக்கையும் தெம்பும் எண்ட இப்போ இல்ல...

இந்த நேரத்துல நான் கடவுள் கிட்ட என்னோட கடைசி ஆசைய சொல்லனும்னு நினைக்குறேன்...
இறைவா, 
   அடுத்த பிறப்பிலாவது என்னை கரி கோழியாக அல்லாமல்
   ஒரு காட்டுக் கோழியாக படைச்சுடு...
ஏன்னா, மறுபடியும் என்னால இந்த நன்றி கெட்ட மனுஷங்களோட வாழ... sorry - சாக முடியாது....   

சதக்...சதக்....

கடைகாரர்: அண்ணே இந்தாங்க நீங்க கிட்ட 1/2 kg கோழி கறி......
       
     

     

Saturday, September 25, 2010

பாட்டி "விட்ட" கதை...

"The Hindu" - Science and Technology ல ஒரு சுவாரசியமான செய்தி, என் பாட்டி நான் சின்னபில்லையா இருந்த காலத்துல ( அப்ப நா ஜட்டி கூட போடாத வயசு ) சொன்ன கதை தான் டப்ன்னு flash backla வந்தது....


ஆனா அதுக்கு முன்னாடி அந்த news என்னனா....


மாடுகளோட cerebrum ல (brain) biochip ஒன்ன, vocal cardla (தொண்டை ) connect பண்ணி.... 
(சு......)
simple லா சொல்லனும்னா அம்மான்னு சொல்லிக்டு இருக்கிற மாடுங்க எல்லாம் மாதாஜி, மம்மி, அப்டி இப்டின்னு அதுங்க நேனைகிரத பேசமுடியும்...


But ஒரு small technical error ஏற்பட்டதால அந்த project இப்ப அந்தரத்துல பப்பரபானு கேடபுல கெடக்குது...


இனி flashback.....


flashbackku முன்னாடி எங்க பாட்டிய பத்தி ஒரு சின்ன builduppu...
கத சொல்லறதுல எங்க பாட்டி ஒரு stephen speilberg + நம்ம வுரு - ராம நாராயணனோட கலவை..

பாட்டி "விட்ட" கதை.....

அப்ப tv, ரேடியோ, எதுவுமே time passuku இல்லாத நேரம் (1990's) - எங்கலுக்கு இருக்கிற ஒரே entertainent எங்க பாட்டிகிட்ட கத கேக்குறது மட்டும்தான்... 

சாரதாமணி  பாட்டி : அந்த காலத்துல நல்லா வாழ்ந்த குடும்பம் - பெரியசாமியோட குடும்பம். தோப்பு, கரும்பு காடு, வயல், வாசல், இப்டி ஒரு குட்டி கிராமமே அவருக்கு சொந்தம். ஆனா அவரோட கேட்ட நேரம் - தொழிலில் ஏற்பட்ட இழப்பு, அவரை நடுதெருவுக்கு கொண்டு வந்தது.. 

எல்லாம் அவரை விட்டு சென்றபின்பும் ஒரே ஒரு விசுவாசி - சுந்தரம் மட்டும் அவர்கலுகு வுரு துணையாக இருந்தான்...

அப்பறம் ஒரு நாள் பெரியசாமி சுந்தரத்திடம் : 
சுந்தரம் உன்னோட நல்லதுக்கு தான் சொல்லறேன் நீ வேற எங்காவது போய் போலசுகோ, ஏன்னா என்னாலையும் உனக்கு சம்பளம் கொடுக்க முடியாது - நீயும் எவ்வளவு நாள் தான் எங்கலுக்காக கஷ்டபடுற , போதும்பா...

சுந்தரத்தாளையும் அதுக்கு மேலயும் அங்கு இருக்க முடியாதுகரத தெரிஞ்சுகிட்டு வெளி வுருக்கு வேலைக்கு சென்றுட்டான்......             

Cross talk :
அம்மா : டேய் home work பண்ணிடிங்களா,
பாட்டி : எல்லாம் பண்ணிட்டாங்க மா....
அம்மா : (சற்றும் பாட்டியை சட்டை செய்யாமல் ) சரி கத கேட்டது போதும்  வாங்க சாப்டலாம்....
பாட்டி : நீங்க சாப்டு வந்தாதான் பாட்டி கத சொல்லுவேன் (இவ்வாறு சொல்ல மனதில்லாமல் சொன்னால் )
(Mind voice il நான் :
 இறைவா எங்கம்மாவுக்காவது அவளை மதிக்கும் மருமகள் வரட்டும்பா )  

சர சரனு சாப்டு கத கேக்க வந்தோம், பாட்டி சாபிடால என்ற ஆர்வம் சிறுதும் இன்றி.. 

பாட்டி கதையை தொடர்ந்தாள் :
பெரியசாமியின் குடும்பம் நிலை ரொம்பவும் கச்டமாகிடுச்சு..... ஒரு வேல saapaattukku    கூட இல்லாத நிலை....
சுந்தரம் கஷ்ட பட்டு நல்ல நிலைக்கு வந்துட்டான் ரொம்ப சீகிரமே.....

நன்றி கடனாய் பெரியசாமியை பாக்க வந்த சுந்தரத்துக்கு ரொம்பவே வேதனையா இருந்துச்சு அவங்களோட அந்த நிலைமை பார்த்து....
தன் கண்முன்னே தனக்கு சம்பளம் கொடுத்த முதலாளி இன்று 5/- சம்பள தின கூலி தொழிலாளி...

தன்னால் ஆனா பொருளுதவியை அவங்கலுக்கு கொடுத்துட்டு -  பிரியமனமில்லாமல் கிளம்பினான்... ரொம்ப களைப்பா இருந்ததால ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தான்....

Beyond the science - matters:  இனிமேல் தான் " பாட்டி 'விட்ட' கதைகே நாம பிரயாணம் பன்னபோரோம்.......

அதே மரத்துல, அந்த பக்கமா ரெண்டு மாடு இருந்துச்சு...
அதுங்க பேசுச்சு - ஆமா அத கொஞ்சம் கூட சுந்தரம் எதிர்பார்கவே இல்ல... இருந்தாலும் தூங்கிக்கிட்டு அதுங்க பேசுறத கவனிக்க ஆரம்பிச்சான்.....

brown மாடு :
ஒரு மனுஷனுக்கு கஷ்டம் வரலாம் ஆனா பெரியசாமி குடும்பத்துக்கு வந்த மாதிரி   கஷ்டம் வரகூடாது... 
white மாடு :   இதுக்கெல்லாம் காரணம் அவங்க தான் brown அண்ணே....
brown மாடு : என்ன white தம்பி சொல்றிங்க, ஒன்னும் புரியலேயே...
white மாடு : ஒவ்வொரு நாளும் சிவனும், பார்வதியும் தான் எல்லாருக்கும் படி அளப்பார்கள் - அதுவும் ஒருவருக்கு எவ்வளவு தேவையோ அத மட்டு தான் அளபாங்க...
இந்த பெரியசமியோட குடும்பம் மட்டும் கேடைகரத மிச்சம் பண்ணி பண்ணி வைகிரதால அவங்க குடும்பத்துக்கு படி அளகிரதே இல்லையாம்...
whiteடும்  brownnum வேற கதை பேச ஆரம்பிச்சுருச்சு ஆனா இத எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்த நம்ம சுந்தரம் உசார் ஆகிடான்....

விறு விறுனு பெரியசமியோட வீட்டுக்கு போனான்... இருக்கிற சட்டி பாத்திரத்துல இருந்த  சாப்பாட்ட காலிபண்ண முதலாளிகே உத்தரவிட்டான்...
வேற வழி தெரியாம அவங்களும் அவன் பேச்சை கேட்டு அப்டியே செஞ்சாங்க..

அடுத்தநாளே, 10/- சம்பளத்துக்கு அழைப்பு வந்தது பெரியசாமிக்கு.... அன்று இரவே எல்லா ரூபாய்க்கும் அரிசி பருப்பு வாங்கி அப்பணத்தை காலி பண்ண சொன்னான் சுந்தரம்... 
சுந்தரம்: ஏன் எதுக்குன்னு கேள்வி மட்டும் கேட்காதிங்க எல்லாம் உங்க நல்லதுகுக்காக தான் செய்யுறேன்...
பெரியசாமியும் நல்லது நடந்தால் சரிதான்னு எல்லாத்துக்கும் சம்மதித்தார்.....

அடுத்தநாள்,
20/-  சம்பளத்துக்கு அழைப்பு வந்தது பெரியசாமிக்கு.... அன்றிரவும் சுந்தரம் கூறியவாரே பெரியசாமியின் பெரிய குடும்பம் அனைத்தையும் காலி செய்தது...

சிவன் மேலும் ௫௦50/- அடுத்த நாள் படி அளந்தார் ...
50/- 100/- ஆனது அவர்களும் சளைக்காமல் வுண்டு பெருத்துக்கொண்டே போயினர்...
ஒரு கட்டத்தில் பூமா தேவிகே இவர்களின் பாரம் தாளாமல் சிவனிடம் முறை இட்டால்.... பார்வதி தேவிக்கு புரிந்தது இதல்லாம் இந்த brownnum whitum பேசிய speechaal தான் என்று...

அன்று முதல் மாடுகள் என்றும் அம்மா என்ற வார்த்தையை தவிர 
வேறு வார்த்தைகள் பேசாதவாறு சிவனும் பார்வதியும்  அவைகளுக்கு வாய்க்கட்டு போட்டு விட்டனர் .... 

பின்னாளில் பெரியசாமியும் நல்லதொரு நிலைமைக்கு மீண்டு விட்டார்....

Back to 2010 thu, The Hindu - Science & technology.... 
 டேய் வெள்ளக்காரன்களா நீங்க எவள்ளவு முக்குனாலும்  மாட்ட பேசவைக்க முடியாதுடி, அதெல்லாம் அந்த ஈசன் கையில் தான் இருக்கு...  

அரே ஓ சம்போ...

   
            


      
    
     


Saturday, August 21, 2010

தனிமையில் நான்.... ( Seriousa ஒரு சிணுங்கள்...... )

500 , 1000 , 1500 , 2000 ...7000 /-  என்னோட முதல் மாச சம்பளம்,
  படிகிரகாலதுல shocks துவச்சு போட்ட treatu , லவ் புட்டுகிட்டா  treatu , இப்டி treatik கான que anna university counselling que ah விட பெருசு..
 ஆனா இன்னைக்கு,
    வாங்கடா மச்சிகளா treat வைகுரேனு சொன்னாலும் - முடியாது அப்டிங்கறத மூணே வார்தேல சொல்லிராணுக - சாரி டா மாப்ள..
டாப் கியர்ல இருந்த சந்தோசம் அப்டியே third கியர்கு shift ஆகுது...
     இந்தாங்க சார் ஸ்வீட் இன்னைக்கு முதல் மாசம்  சம்பளம் வாங்கி இருக்கேன், நானே பண்ணினது அப்டின்னு குடுத்தா அந்த ஓரமா வச்சுட்டு போங்கனு சொல்லுறாங்க..
third  கியருல இருந்த சந்தோசம் இப்போ சுத்தமா neutralluku  வந்துருச்சு..
 இந்த sweeta தான் ஷேர் பண்ணிக்க முடியல அட்லீஸ்ட் நம்ம feelingsa  யாச்சும் பண்ணிகலாமேன்னு நெனைச்சா...battery லோ ( வாழ்க சீனா mobiles )
கலரா இருந்த ரூபா நோட் இப்போ எனக்கு கருப்பு வெள்ளையா  தெரியுது... கூடவே என்னோட  
feelings கதறல்...

" நானும் ராஜா யாரும் இல்லா வுருக்கு
  நான்கு செவுறும் முட்டிக்கொண்டது - ஏன்
  என் தனிமையை கெடுக்கிறாய் என்று..
  தனிமையே வுனக்கு கணிதம் தெரியாதா- ஏன்
  என்னை கணக்கு வழக்கு இல்லாமல் கண்டிக்குறாய்....

என்னடா உன் ராசி, கனவிலும் தனியாய் நடக்கிறாய்..
வந்து விட்டதா உன் எல்லை-போதும்டா சாமி இந்த தொல்லை..."

இறைவா...
    எதையும் தாங்க இதயம் தந்தவனே
     இதையும் தாங்க வலிமை கொடு..

                                        - கடுப்பில் ........> நந்தா 
பின் குறிப்பு..
             எனினும் தனிமையே, உன்னுடைய முழு நேர ரசிகனாய்
             மன்ற தலைவனாய் ஆனேன் - தனியாக....
             
           (தனிமை:  ஐயோ பாவம்.....
                                  யார் பெத்த பிள்ளையோ இப்டி தனியா பொலம்புது...... )
    
   

Monday, August 16, 2010

Definetely men.....

Definetely men.....
              (உப்புக்கு  கூட  women இல்ல....)
கால் மணி நேர கனவுல கள்ள போட்ட கத தெரியுமா.... அப்டி இல்லனா இத படிச்சா உங்களுக்கு புரியும்...
SHOCKS வாசம் தெரியாத SHOE இருக்க முடியாது, ஆனா பெண் வாசனை இல்லாத பசங்க பலபேர் இருகாங்க.... அவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு சமர்ப்பணம்
( PUBLIC : ஆஹ் ரொம்ப முக்கியம் )

"ஹரி ராம கிருஷ்ண நந்தகோபாலா பொண்ணுங்கள பார்த்த கண்ணுமுளிய நோன்டிபுடுவேன்..." என்று நைனா கூறிய வார்த்தைகள் கபாலதுல கப்புன்னு வந்தது- அந்த சயின்ஸ் டீச்சர் வந்தவுடன் (boys schoola இதலாம்  ரொம்ப அறிதுபா...) இஸ் school
படிக்கும் போது நமக்கெதுக்கு இதலாம்னு நானும் விட்டுடேன்...

சரி காலேஜ் போறோமே அங்க எதாவது தேறுமான்னு பார்த்த - உப்புக்கு கூட women  இல்ல  அந்த mechanical departmentla .....

நமக்கேதுவோ பெருசா கடவுள் குடுகரதிருக்காக இதலாம் பன்றாப்டினு நெனசிகிட்டு வேலைக்கிப்போன  அங்க ஒரு கொடும....   அட ஆமா பா, அம்பது வயசுல அம்சமா(?) ஒரு பா(ர்)ட்டி (gappu விடாம இந்த சாபம் நாம்பல எப்டிலாம்   தொறத்துது பாரேன் ..)
அந்த ஒரே ஒரு குமரி மட்டும் தான் எங்களின் கம்பெனி கதாநாயகி...

கால் மணி நேர கனவுல கல்லு...

இவ்வளவு ரணகலதிளையும் ஒரு கிளுகிளுப்பு....
EVENING bus journey ... அதுவும் அந்த பொண்ணு வந்ததும் நம்ம ஓட்ட பஸ் கூட AC போட்ட எபக்டு....அவ எங்கிட்டு பார்த்தாலும் ஓரமா நம்பள பார்க்கிற மாதிரியே ஒரு பீலிங்கு... ஒவ்வொரு stopum வரும் போது கேப்பு கோரஞ்சுகிடே வருது.. timinga காதுல வச்ச ஹெட் போன்ல.. - "தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது தம்பி தங்க கம்பி ..." -  நந்தா ரெடி ஆகிக நீயும் ஒரு பிகரு கூட travel பண்ணேன்னு நாளைக்கு ஆபீஸ்ல எல்லார் வயிதெரிச்சலையும் வாங்கிகடலாம் ..

இப்டி ஒரு பக்கம் நாபாட்டுக்கு பக்கம் பக்கமா யோசிசுகிடு இருகோசொல ஒரு பன்னாட அவளாண்ட போயி ஒட ஒடன்னு ஒடகிறான் கடலைய... ( அட அவன் எங்க இருந்து மொலசானே தெரியல பா ...) அவன் உடச்சது கடைல மட்டும் இல்ல என் கனவு கடலையும் தான்...

கடைசில அந்த பக்கி அந்த பிகரோட பாக்கசொல,
-" மச்சி இந்த பலம் புளிக்கும் டானு " எனக்குளே அப்டி ஒரு சமாதானம் சொல்லிகினு கெளம்பினேன் வயிதெரிச்சலுடன்.......
(public : ஒனகேலாம் அந்த அம்பது வயசு angel தாண்டி .... . ) 

Sunday, August 15, 2010

Yennai Theriyuma.....

Before you are going into the " i - corner", u have 2 completely (atleast 20%)know  about my views... 
( இங்கிலிஸ்ல எழுதுறது  எவ்வளவு  கஷ்டமான விஷயம் அதுவும் தப்பு இல்லாம ரொம்ப சிரமம்...)
  சின்ன வயசுல முதலமைச்சர் ஆகணும்னு கனவு, ஆனா இந்த ஸ்டாலினும் அழகிரியும் முட்டி கிட்ட தாள அந்த பதவி மீது இருந்த ரேச்பெக்டே போச்சு...
  சரி அப்துல் கலாம் மாதிரி ஒரு scientistaa  ஆயடலாம்னா  அட இந்த படிப்பு கருமம் அறியர் மேல அறியர் கொரியர் போல வந்து நம்ம ஆராய்ச்சி சிந்தனையை சிதைத்து விட்டது...  
   சரி போலாச்சு போங்கடா ஒரு  bussiness man ஆவது ஆகலாம்னா
அதுக்கு கேக்குறாங்க துட்டு.....
நமக்குள்ள ஒரு கலைஞன் குத்த வச்சு ஒக்காந்து இருக்கானே அவனையாவது உசுப்பி விடுவோமேநு பார்த்து கதை திரைகதை நடனம் அப்டின்னு யோசிகசொல, இந்த friendsnu  கூடவே சுத்திக்கிட்டு இருந்த பசங்க... டே இத இந்த படுதுல இருந்து தானே சுட்ட  அப்டின்னு சொல்லி underwear வரைக்கும் investigation பண்றணுக....
கடைசியா என்னடா பண்றதுன்னு தெரியாம இருந்தபோ....
நீ எதுமே பன்னதாணு -   ஒரு வேலைய கடவுளா பார்த்து கொடுத்தாரு
(ஹீ ஹீ ஹீ R & D executive - அட serioousapa )
இன்னொரு கொடும என்னன்னா நான் ஆல் clear ஆனது (இந்த புகழ் இறைவனையும்  papperi திருத்திய பெருந்தகையுமே சாரும் - யாரு பெத்த பிள்ளையோ...வாழ்க ரொம்ப நாள் வளமுடன் )....
CLIMAX ரீல்.... 
ஆனா பாருங்க லைப் ரொம்ப போர் அடிச்சது இந்த blog மாதிரி(?)... சோ என்ன பண்ணலாம்னு யோசிசுகிட்டு இருந்தபோ ஒரு காக்கா  வந்து தலையில டங்குன்னு தட்டுச்சு.... நா "ஐ..... யோன்னு   கத்துனே அப்ப அந்த காக்கா "ஐ.... யானு ஜாலியா பரந்து போய்டுச்சு.....
இப்டி ஒருத்தருக்கு ஐ.... யானு தெரியற விஷயம் ஒருத்தருக்கு ஐ.....யோன்னு தெரியும் அவங்களுக்கான corner இந்த "i - CORNER "

                                                                                               இனி தான் (இம்சை) ஆரம்பம்...
                                                                                                    கதை
                                                                                                  திரைகதை
                                                                                                  ஆக்கம்
                                                                                                ஆபீஸ் பாய்
                                                                                                                   ........>நந்தா .S
                                       
 
         

Translate to Ur Mother Tounge

What Are These? | Blog Translate Gadget
There was an error in this gadget