Thursday, May 24, 2012

சித்தம் 4


இதுவரை:

அன்று
 தென்னாவரம் ஆண்ட பாண்டியனிடம் போரிட்டு, நாகமணி ஒலியால்
தோல்வியுண்ட ஆர்ய படைகள் சக்தி இழந்து, சிதைந்து போயிருந்தது. தன்னுடைய வெற்றியினை விட ஆரியரின் நிலை கண்டு கலங்கியே இருந்தான் பாண்டியன். என்ன தான் அவன் நாகமணி கற்களை பொடிகளாக்கி எதிர்கால அழிவுகளை தவிர்திருந்தாலும் அவனால், தன்னால் ஏற்பட்ட அழிவை அவன் தான் கொண்ட கர்மவினை என்றே கருதினான்.


இன்று
ஜெயந்தியும் நந்தனும் இரவை நெருங்கும் மாலையை ரசித்து கொண்டு தங்களின் வண்டிகளை நோக்கி நடந்தனர். டீ கடை அருகே வந்து கொண்டிருந்த அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி......... driver சுப்பு சற்பமென ஊர்ந்து கோவிலின் மலை பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தான்......


இனி

இன்று
தான் கொண்ட குழப்பங்கள் தன்னை தொடருவதை உணர்ந்த நந்தன், சற்றும் தாமதிக்காமல் சுப்புவை பின் தொடர்ந்தான். வேறு வழியேதும் இல்லாமல் ஜெயந்தி தன் மாமா சுந்தரத்திற்கு call செய்து கொண்டே நந்தனை பின் தொடர்ந்தாள். சுப்புவின் வேகம் நந்தனையும் ஜெயந்தியையும் மூச்சிரைக்க வைத்தது. 

ஜெயந்தி, இது ஏதோ multiple personality மாதிரி தெரியுது, ரொம்ப நாளா இந்த சற்ப தேடல், என்னோட சேர்த்து அவனுக்கும் தொத்திகிட்டது. அனேகமா அது தான் இதுக்கு காரணம்னு நெனைக்குறேன்.”

சுந்தரம் ஜெயந்தியின் அலை பேசியின் மறு முனையிலிருந்து,
“ஜெயந்தி இன்னும் ½ மணி நேரத்துல அங்க நா இருப்பேன், இந்த நாளுக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன். பயப்படாம அங்க நடக்குறத எப்படியாவது video பண்ணிவை. தைரியமா இரு, இந்த நாள், இந்த நிமிஷம் சாதாரணமானது இல்ல, புரிஞ்சது தானே நா சொல்லுறது...... 

“ம்‌ம்‌ம்‌ம்..... புரியுது மாமா.......”  phonecut செய்து விட்டு, கண்களை மூடி பின் விழி திறந்து பார்த்தாள் சுற்றிலும் இருட்டு, அங்கு நடந்ததை பார்த்து அதிர்ந்தே போனாள் ஜெயந்தி.

சுப்புவை நெருங்கிய நந்தனை சற்பமென மாறிய சுப்பு கடிக்க முயன்ற போது  அருகில் இருந்த வாழமட்டையை வைத்து வழி மறித்தான். ஆச்சர்யம்! அம்மட்டையானது நீலமென மாறியதும் மிரண்டே போயினர் ஜெயந்தியும், நந்தனும்.   


அன்று
பாண்டியன் தான் கொண்ட கர்ம வினை நீங்க தன் குருவும், அஷ்டமா சித்திகளை பெற்றவருமான அகத்தியரை நாடினான். 

அகத்தியர்
  நாகமணி கற்களின் ஒலிகள் ஆரியரின் உடலில் ஊடுருவி செல்களையெல்லாம் செயல் இழக்க வைத்திருந்தது. அவற்றை சரி செய்தால் மட்டுமே பாண்டியனுடைய மனக்குறையும், கர்ம வினையும் நீங்குமென தெரிவித்தார் அகத்தியர். 

அவற்றை சரி செய்ய அஷ்டலோக செம்பொன் (Mono atomic Gold) எனப்படும் 8 உலோகங்களினால் ஆன ஒரு தாது பொருள் தேவை படும் என்றும், அது Persia வளை கூடாவின் (Hawai தீவு – அன்றைய மாயன் நாகரீக ஸ்தலம்) கடல் நீரில் மட்டும் கிடைப்பதாகும்.

இந்த Mono atomic Gold மூளை பகுதியில் அதிக மின் ஆற்றலை ஏற்படுத்தி செயலிழந்த செல்களை புதுப்பிக்கும் தன்மையுடையது. அப்படிபட்ட தாதுவை அகத்தியர் எடுத்து தருவதாக பாண்டியனிடம் உறுதி செய்தார்.         

இன்று  
அங்கு விரைந்து வந்த சுந்தரம், ஜெயந்தியையும், நந்தனையும் தேட முற்பட்ட போது, நீண்ட நாள் தான் தேடும் ஒன்று கிட்டப்போவதை போல் உள்ளுணர்ந்தான். அவ்விருவரும் சுந்தரத்தின் கண்ணில் பட,
“என்ன ஜெயந்தி கிடைச்சதா.......”

இல்லை என்பன போல் தலையாட்டிய ஜெயந்தியை வினோதமாக பார்த்த நந்தனின் கவனத்தை திசை திருப்ப சுந்தரம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
I am சுந்தரம், நான் ஒரு pseudoscience philosopher”.

நந்தன், “அது என்ன Pseudoscience….?”

சுந்தரம், “உங்க பேர் என்ன.....”

“நந்தன்”.

 “Mr.நந்தன், Pseudoscienceனா அறிவியல் சார்ந்த சாத்தியம் உள்ள விஷயம் ஆனா அதுக்கு அறிவியல் சார்ந்த ஆதாரம் இல்லாம இருக்கும். எனக்கு இந்த வள்ளிபுறத்தின் மீது இருக்குற தீவிரத்திற்கு ஒரு வகையில் இந்த pseudoscienceசும் ஒரு காரணம்”.

நந்தன்,..........

ஏற்கனவே குழம்பி போயிருந்த நந்தனை, மீண்டும் ஒரு குழப்பம் தாக்கியது போல் உணரச்செய்தது சுந்தரத்தின் விளக்கம்.

“என்ன புரியலையா நந்தன்.....”

“Sir, அதெல்லாம் இருக்கட்டும்.....  இப்போ என்னோட Driver சுப்பு என்ன ஆனான்னு கண்டு பிடிக்கணும்.”

" உங்க சுப்பு எங்க போய்கிட்டு இருக்கான்னு என்னோட Pseudoscience theory மூலமா சொல்ல முடியும். ஆனா உங்களால அத புரிஞ்சிக்க சில தெளிவுகளும், எதையும் கற்க திறந்த மனமும் வேண்டும்".

இதையாவும் ஆமோதிப்பது போல் தலையசைத்தாள் ஜெயந்தி....   

“நந்தன் உங்களுக்கு விளங்க சொல்லனும்னா, நாம உலக நாகரீகத்தின் ஆதியை தேடிய பயணமொன்று செல்லனும். அந்த பயணமானது,dooms day”னு சொல்லப்படுற மாயன் நாகரீகத்தின் முடிவிலிருந்து பின்னோக்கி நாம செல்லனும். 5,000 ஆண்டுகளுக்கு முன்னாடி மாயன் சமுதாயம், 2012ல உலகம் அழியும் என்றும், அப்ப அவங்களோட நம்பிக்கை தெய்வமான – அனுனாகி என்ற கடவுள் தோன்றி மீண்டும் அவர்களோட சமுதாயத்த படைப்பார் என்பதும் அவர்களோட நம்பிக்கை”.  

அனுனாகி

 “சுந்தரம் Sir, நீங்க சொல்ற நம்பிக்கைக்கும் – சுப்பு எங்க போய் இருபான்றதுக்கும் என்ன தான் சம்பந்தம்”.

“சம்பந்தம் நிறையா இருக்கு Mr.நந்தன்.....” சுப்புவோட அப்பா – உசிலம்பட்டி விருமாண்டி அவரோட gene தான் உலகின் முதல் மனித மரபணுவான M130 மரபணுவாகும். அந்த முதல் மரபணு ஆப்ரிக்க தேசத்திலிருந்து Persia வாயிலாக தென் தமிழகம் வந்து இருக்கு. ஒரு வகையில சொல்லனும்னா சுப்பு முதன் மனிதனோட வித்து அப்படிங்கறத விட மாயன் சமுதாயத்தோட கடைசி நம்பிக்கை..

“இவ்ளோ நாள் இவன் கூட இருந்து இருக்கேன் எனக்கே தெரியாத இந்த விஷயம் உங்களுக்கு எப்டி தெரியும் சுந்தரம்....”

“இருட்டிருச்சு நந்தன், நாம வீட்ல போய் மிச்சத்த பேசிக்குவோம்.....”

"Sir, அப்ப சுப்பு....."?    


அன்று

அகத்தியர் தான் கற்றறிந்த சித்திகளினால் மாயன் சமுதாயம் குடியுண்ட இடத்திற்கு பிரயாணம் ஆனார். அங்கு நாகரீகம் தலைக்காத அந்த காலகட்டத்தில், வாழ்வின் ஆழம் கண்ட அகத்தியர் அவர்களுக்கு தொழில் நுட்பம், கட்டிட கலை, வானவியல் சாஸ்த்திரம், போன்றவற்றை கற்றுக்கொடுத்தார். அவர்களின் இஷ்ட தெய்வமாக மாறிய அகத்தியரை, அனுனாகி என்று பெயரிட்டு வணங்கினர். 

 மாயன் இனத்தவரைக் கொண்டே அவர் தேடி வந்த அஷ்டலோக செம்பொன் (Mono Atomic Gold) எனும் தாதினை எடுத்து பாண்டியனின் குறை நீக்கினார்.
மாயன் பூமியில் தனக்குதவிய மக்களுக்கு அகத்தியர், எதிர் காலத்தை கணிக்கும் நாட்காட்டியை (மாயன் Calender) தன்னுடைய உயிர் சக்தி (Cosmic Energy) மூலம் உயிரூட்டி பரிசளித்தார். என்று அது உயிரற்று நிற்கிறதோ அன்று அதற்கு உயிர் சக்தியூட்ட மீண்டும் தான் வருவதாக வாக்களித்து விடை பெற்றார் அகத்தியர். 

அவர் (அனுனாகி) விடை பெற்று சென்ற சிறிது கால கட்டங்களிலே, நெபுலா கிரக வாசிகள் - மாயன் சமுதாயத்தினர் ஒவ்வொருவரிடமும் இருந்த  உயிர் சக்தியை (Cosmic Energy – அகத்தியர் அருளியது) அபகரிக்க அவர்கள் அனைவரையும் தங்களின் கிரகத்துக்கு கவர்ந்து சென்று விட்டனர்.  

“சித்தனின் வாக்கென்றும் பொய்க்காது,
பொய்க்கும் வாக்கென்றும் சித்தனின் நாவினில் பிறவாது..”



Translate to Ur Mother Tounge

What Are These? | Blog Translate Gadget